ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் |
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் இடம் பெற்ற குட்டி ஸ்டோரி பாடல் ரசிகர்களிடத்தில் வரவேற்பு பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகமாகி வருகையில் ஒவ்வொரு வரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பாடகர் அந்தோணி தாசன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற குட்டி ஸ்டாரி பாடலின் வரிகளை கொரோனா மற்றும் அது தொடர்புடைய விழிப்புணர்வு வரிகளாக மாற்றி பாடி உள்ளனர். இதில் நடிகர் அப்புக்குட்டியும் இடம் பெற்றுள்ளார். வீட்டுல இருப்போம் அது தான் பெஸ்ட், வௌியில போனா கொரோனா மஸ்ட் போன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இந்த பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இதுகுறித்து அந்தோணி கூறுகையில், உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம் கொரோனா நோய் விழிப்புணர்வுக்காக நாங்களும் நண்பன்டா வாட்ஸ்-அப் குரூப் நண்பர்கள் சார்பாக இப்பாடலை பதிவு செய்கிறோம். இப்பாடலை வரி மாற்றி எழுதி மொபைல் போனில் எடிட் செய்தவர் சிகா. பாடியிருப்பவர் நவ்பால் ராஜா. இப்பாடலின் இசை தாங்கள் அறிந்ததே அனிருத்தின் மாஸ்டர் படம். இப்பாடலில் உள்ள கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும் நாங்கள் அனைவரும் அரசு சொல்லுக்கு இணங்க தனிமையிலிருந்து இப்பாடலை பண்ணியிருக்கிறோம் நன்றி. என பதிவிட்டுள்ளார்.
https://www.facebook.com/anthonydaasan/videos/3289673827728069/