Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெப்சிக்கு அள்ளியும், நடிகர் சங்கத்திற்கு கிள்ளியும் கொடுக்கும் நட்சத்திரங்கள்

07 ஏப், 2020 - 13:01 IST
எழுத்தின் அளவு:
Less-amount-donated-to-Nadigarsangam

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 22 நாட்கள் ஊரடங்கு அமுலில் உள்ளது. இதன் காரணமாக கடந்த 19ந் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு, தியேட்டர்களும் மூடப்பட்டது. இதனால் திரைப்படத்தை நம்பியுள்ள 15 ஆயிரம் தினக்கூலி பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இந்த நிதிக்கு ரஜினிகாந்த் 50 லட்சம் சிவகார்த்திகேயன் 25 லட்சம், தனுஷ் 15 லட்சம், நயன்தாரா 20 லட்சம் என அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.

திரைப்படத் தொழிலாளர்களை போலவே தினக்கூலி பணியாளர்களாக இருக்கிறவர்கள் துணை நடிகர், நடிகைகள் இவர்களுக்கும் நிதி வழங்குங்கள் என நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர், சிறப்பு அதிகாரி ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.




இந்த வேண்டுகோள்படி முதன் முறையாக ஐசரி கணேஷ் 10 லட்சம் ரூபாய் வழங்கினார். அதன் பிறகு கார்த்தி 2 லட்சம், காமெடி நடிகர் சூரி 1 லட்சம் வழங்கி உள்ளனர். நாசர், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் தலா 50 ஆயிரம் வழங்கி உள்ளனர். நடிகை சங்கீதா 15 ஆயிரம் வழங்கி உள்ளார். மேலும் சில நடிகர், நடிகைகள் தலா 10 ஆயிரம் வழங்கி உள்ளனர். இதுவரை 15 லட்சத்து, 65 ஆயிரம் ரூபாய் சேர்ந்துள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

பெப்சி தொழிலாளர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நட்சத்திரங்கள் நடிகர் சங்கத்திற்கு கிள்ளி கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே நேரத்தில் பெப்சியில் பாதிக்கப்பட்டோர் 15 ஆயிரம் பேர், நடிகர் சங்கத்தில் நாடக நடிகர்கள் தவிர்த்து சினிமாவில் நடிக்கும் துணை நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை 1500 பேர் தான் என்ற கருத்தும் நிலவுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவிற்கு மேலும் ஒரு ஹாலிவுட் நடிகர் பலிகொரோனாவிற்கு மேலும் ஒரு ஹாலிவுட் ... நித்யா மேனனை எழுத்தாளராக்கிய கொரோனா ஊரடங்கு நித்யா மேனனை எழுத்தாளராக்கிய கொரோனா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in