Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வீட்டில் இருந்தே 10 நடிகர்கள் நடித்த கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

07 ஏப், 2020 - 11:39 IST
எழுத்தின் அளவு:
Rajini---Amithabh-in-Corona-awareness-shortfilm

மும்பை : கொரோனா நோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் குறும்படத்தில் நடித்துள்ளனர்.

சீனாவில் இருந்து புறப்பட்ட கொடிய வைரஸ் கொரோனா இந்தியாவிலும் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு திரையுலகினரும் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இந்நிலையில் சோனி இந்தியா நிறுவனம், கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை வௌியிட்டுள்ளனர்.

பேமிலி என்ற பெயரில் விழிப்புணர்வு குறும்படமாக எடுக்கப்பட்டுள்ள இதை பிரசூன் பாண்டே இயக்கி உள்ளார். அமிதாப் பச்சன், ரஜினி, சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், ரன்பீர் கபூர், தில்ஜித் தோஸ்னா உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். சமூக விலகலை எப்படி கடைபிடிப்பது, வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என இவர்கள் சொல்கிறார்கள்.





4.35 நிமிடம் ஓடும் அந்த குறும்படத்தின் ஆரம்பத்தில் அமிதாப் பச்சன் தன் கூலிங் கிளாஸ் கண்ணாடியை காணோம் என வீட்டில் இருப்பவர்களிடம் கேட்கிறார். அதற்கு மேலே கூறிய நடிகர்கள் ஒவ்வொருவரும் தேடுவது போன்றும், பதில் அளிப்பதும் மாதிரியாக உள்ளது. ஒவ்வொரு மொழி நடிகர்களும் அவர்களின் மொழியில் பேசுகிறார்கள். தமிழில் ரஜினிகாந்த் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு ஸ்டைலாக இந்த கண்ணாடியா என வீசுகிறார். இதெல்லாம் சீட்டிங் நான் ஒன்று கேட்டால் நீங்கள் வேறு மொழியில் பேசிக்கொள்கிறீர்க்ள் என சலித்துக்கொள்கிறார் ரன்பீர். கடைசியில் அந்த கண்ணாடி ஆலியா பட் தலையில் தான் இருக்கிறது. கடைசியாக அமிதாப்பிடம் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். இப்போது எதற்கு இந்த கண்ணாடி என பிரியங்கா கேட்க, நான் வௌியில் போக போவது இல்லை, தொலைந்து போகாமல் இருக்க தேட சொன்னேன் என்கிறார் அமிதாப். ரன்பீர், தில்ஜித் போன்றவர்கள் தலையில் அடித்து கொள்வது போன்று முடிகிறது.




வீடியோவின் முடிவில் அமிதாப் பேசும்போது, இந்த வீடியோ ஒவ்வொரு நடிகர்களின் வீட்டில் தனித்தனியாக எடுக்கப்பட்டது. நாங்கள் யாரும் வீட்டை விட்டு வௌியில் வரவில்லை. நீங்களும் வீட்டிலேயே இருங்கள், அது தான் உங்களுக்கு பாதுகாப்பு. கொரோனா வைரஸிலிருந்து நம்மை காக்க இது தான் வழி, அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். இந்த குறும்படம் எடுக்க இன்னொரு காரணமும் உள்ளது. இந்திய சினிமா நடிகர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக உள்ளோம். இப்போது இந்த ஊரடங்கால் அவர்கள் வருமானமின்றி உள்ளனர். டிவி சேனல் மற்றும் பிற ஸ்பான்சர்கள் மூலம் அவர்களுக்கு உதவ உள்ளோம். யாரும் பயப்படாதீர்கள், பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.



Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஆலோசனை!ஆலோசனை! மேம்போக்கான கடிதத்தை எழுதாதீர்கள் - கமலை விமர்சித்த காயத்ரி ரகுராம் மேம்போக்கான கடிதத்தை எழுதாதீர்கள் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

P Sundaramurthy - Chennai,இந்தியா
08 ஏப், 2020 - 08:42 Report Abuse
P Sundaramurthy ஹே ராம் ட்ரைலர் போல இருந்தது.
Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
07 ஏப், 2020 - 14:23 Report Abuse
Vijay D Ratnam பில்டப் குடுத்த அளவுக்கு ஒரு புண்ணாக்கும் இல்லை. ஒரு விழிப்புணர்வு குறும்படத்தை மூன்று நிமிடங்களில் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகும்படி எடுத்திருக்கலாம். ஃபேமிலி என்று வைத்ததற்கு பதில் முதியோர் இல்லம் என்று டைட்டில் வைத்திருக்கலாம்.
Rate this:
vira - tamil naadu,இந்தியா
07 ஏப், 2020 - 12:16 Report Abuse
vira இந்திய சினிமா நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்."எங்கள் காசை கொடுக்க மாட்டோம் என்று " இனி டிவி மூலம் அல்லது 'sponsor' மூலம் உதவ உள்ளோம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in