நண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |
கொரோனா பரவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்பே தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதுடன், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், அதனை மட்டுமே நம்பியுள்ள சினிமா தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலையின்றி தவிக்கும் 1 லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு, ஒரு மாதத்திற்கான உணவு பொருட்களை வழங்குவதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உறுதிமொழி அளித்துள்ளார். வி.ஆர். ஒன் ஆதரவுடன் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் மூலம் சேர்ந்து நாடு முழுவதும் ஒரு லட்சம் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்களை அளிக்க உள்ளனர்.
இதற்காக இந்தியாவின் முன்னணி ஹைப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளுடன் வணிக ரீதியாக இணைந்து, அனைத்து இந்திய சினிமா தொழிலாளர் கூட்டமைப்பில் உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் பார்கோடு உடன் கூடிய கூப்பன்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் நிதியுதவி தேவைப்படும் தொழிலாளர்களுக்கு உதவி வழங்கப்படுமென சோனி பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
இதுப்பற்றி சோனி நிறுவனத்தின் சி.இ.ஓ , என்.பி.சிங் கூறியதாவது, சோனி பிக்சர்ஸ் நிறுவனம் சி.எஸ்.ஆர் செயல்பாட்டின் ஒரு பகுதியாக , பச்சனுடன் இணைந்து தினக்கூலி அடிப்படையில் சினிமாத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளது. தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் அளிப்பதற்கு உறுதி பூண்டுள்ளோம்.
கொரோனா சமயத்தில் வீட்டில் இருப்பதன் முக்கியத்துவம், சமூக விலகலை கடைப்பிடித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சோனி நிறுவனம் தயாரிக்கும் ' ஃபேமிலி' என்ற குறும்படத்தில் ரஜினிகாந்த், ரன்பீர் கபூர், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அமிதாப் பச்சன் தோன்றவுள்ளார் என்றார்.