Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா எதிர்நோக்கும் பெரும் அபாயம்

06 ஏப், 2020 - 13:56 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-to-face-Big-Problem

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு விதித்து நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு வாரத்தில் இது முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு தொடருமா என்பது அப்போதையே நிலையைப் பொறுதே நடக்கும்.

கடந்த பத்து நாட்களுக்கும் மேலா சினிமா படப்பிடிப்புகள் நடைபெறவில்லை, தியேட்டர்களில் காட்சிகள் இல்லை என சினிமா உலகமும் முடங்கிக் கிடக்கிறது. 21 நாட்கள் கழித்தோ அதற்குப் பிறகோ தியேட்டர்கள் திறக்கப்பட்டால் கூட சினிமாத் துறை மீளுமா என்பது சந்தேகம்தான்.

இந்த ஊரடங்கு கால கட்டத்தில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் ஓடிடி தளங்களான அமேசான் பிரைம், நெட் பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றில் பல புதிய திரைப்படங்கள் எச்டி தரத்தில் இருக்கின்றன. படம் வெளியான 50 நாட்களில் இத்தளங்களில் தமிழ்ப் படங்கள் வந்துவிடுகின்றன.

தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழித் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ் என பார்க்க வழி உள்ளது. இவற்றிற்கு மக்கள் பழகிவிட்டால் அவர்கள் மீண்டும் தியேட்டர் பக்கம் வருவது குறைந்துவிடும்.

அதிகபட்சமாக வருடத்திற்கு 1500 மற்றும் 400 ரூபாய் தான் ஓடிடி தளங்களில் கட்டணமாக வாங்கப்படுகிறது. இந்தப் பணத்திற்குத் தேவையான நிகழ்ச்சிகள், படங்களை மக்களால் பார்க்க முடிகிறது. அப்படியிருக்க ஒரு படத்தைப் பார்க்க குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்தால் 1500 ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும். எனவே, மீண்டும் நடுத்தரக் குடும்பங்களை தியேட்டர்கள் பக்கம் பார்ப்பது அரிதாகும்.

ஒரு விஷயத்தில் மக்கள் பழகிவிட்டால், அதிலிருந்து அவர்களை மாற்றுவது கடினம். இப்போதைக்கு மக்கள் ஓடிடி தளங்களில் பழக ஆரம்பித்துவிட்டார்கள். இதை மீறி மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைக்க நிறையவே கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

மேலும், படப்பிடிப்பு முடிந்து வெளிவரத் தயாராக இருக்கும் சில படங்களின் வியாபாரம் சர்ச்சைக்கு உள்ளாகும். உதாரணத்திற்கு 'மாஸ்டர்' படத்தை எடுத்துக் கொள்வோம். இந்தப் படத்தின் வியாபாரம் சுமார் 200 கோடிக்கும் மேல் ஆகியுள்ளது. அத் தொகையை வசூலிக்க வேண்டுமென்றால் 400 கோடி வரை வசூலித்தாக வேண்டும்.

தியேட்டர்கள் மே மாதம் திறக்கப்பட்டால் கூட மக்கள் வருவார்களா என்பது சந்தேகம்தான். கொரானோ வைரஸ் நாட்டை விட்டு, உலகை விட்டு முற்றிலுமாக ஒழிந்தது என்று தெரிந்தால் மட்டுமே சினிமாவை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் என நினைக்கும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள். அப்படி அவர்கள் வரவில்லை என்றால் 'மாஸ்டர்' படம் மட்டுமல்ல, வெளிவரும் ஒவ்வொரு படமுமே பெரும் சவாலை, சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வியாபாரத்திற்கு ஏற்றபடி வசூலாகவில்லை என்றால் நஷ்டம் தான் வரும். எனவே, அதைக் கருத்தில் கொண்டு உடனடியாகவோ சில வாரங்களுக்குப் பிறகோ கூட 'மாஸ்டர்' போன்ற பெரிய படங்கள் வெளிவர வாய்ப்பில்லை.

தமிழ்நாட்டை விட வெளிநாடுகளிலும் தமிழ்ப் படங்கள் வசூலித்துக் கொடுப்பது பல கோடிகள். அங்கெல்லாமும் மக்கள் தியேட்டர்களுக்கு உடனே வர வாய்ப்பில்லை. அவற்றைக் கருத்தில் கொண்டும் தான் படங்கள் வெளிவர வேண்டும். இப்போதே 'மாஸ்டர்' படத்தின் வெளிநாட்டு உரிமைக்கான கொடுக்கப்பட்ட தொகையில் மாற்றம் செய்ய வேண்டும் என அதை வாங்கியவர் சொல்லி வருகிறாராம். நிலைமை இப்படியிருக்க அடுத்த சில வாரங்களுக்கு படங்களை வெளியிடுவதை பலரும் யோசிப்பார்கள்.

தாங்கள் சார்ந்து துறை தொழிலளார்களுக்கே உதவ முன் வராத நடிகர்கள் மீது அவர்களது ரசிகர்களுக்கு ஒரு வெறுப்பு வருகிறதோ இல்லையோ நடுநிலை ரசிகர்களுக்கு நிச்சயம் வரும். முதல்வர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதி போன்றவற்றிற்கு மற்ற மொழி நடிகர்கள் கோடி கோடியாக கொடுக்கும் போது தமிழ் நடிகர்கள் கொடுக்க முன் வராததும் அவர்களை யோசிக்க வைக்கும்.

மே மாத மத்தியில் ஒருவேளை நிலைமை சீரானாலும் கூட ஜுன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதை வைத்து மக்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள்.

இப்படி அடுத்தடுத்து வர உள்ள பிரச்சினைகளை மீறி சினிமா உலகம் எப்படி மீண்டு எழப் போகிறது ?.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
பொன்விழா படங்கள்: கஸ்தூரி திலகம்பொன்விழா படங்கள்: கஸ்தூரி திலகம் கொரோனா அழிந்த பின் என்ன செய்யணும்? : காஜல் கொரோனா அழிந்த பின் என்ன செய்யணும்? : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

aroune - nottingham,யுனைடெட் கிங்டம்
08 ஏப், 2020 - 00:03 Report Abuse
aroune கொரோன வால் ஒரு நல்லது
Rate this:
Covim-20 - Soriyaar land,இந்தியா
07 ஏப், 2020 - 19:36 Report Abuse
Covim-20 சினிமா ஒழிந்தால் நூறாண்டுகளாக சமுதாயத்திற்கு கேடு விளைவித்த பெரும் அபாயம் நீங்கும்...
Rate this:
07 ஏப், 2020 - 08:12 Report Abuse
chandran, pudhucherry சினிமா முற்றிலும் ஒழிந்தால் நல்லது
Rate this:
06 ஏப், 2020 - 22:37 Report Abuse
ராஜேஸ் இருந்தாலும் நம்ம பெரிய நடிகர்கள் புத்திசாலிக தான்பா. சரியா நேரம் பாத்து அரசியலுக்கு தாவிட்டாங்க பாருங்க. நிற்க. ஒரு சினிமா தயாரிக்க 200 கோடி செலவு செய்ய முடியுது. எவ்வளவு பெரிய பணம்? விடலைங்களோட அப்பங்காசு பணமும், வரி ஏய்ச்ச கருப்பு பணமும் தான் அங்கே சுத்துது. நாடு முழுக்க சினிமாவை மூடுனா நாடு வளர்றதுக்கு 40% சான்ஸ் அதிகமாகும். முடியட்டும் விடியட்டும்.
Rate this:
இருங்கடா - Kitchener,கனடா
06 ஏப், 2020 - 21:47 Report Abuse
இருங்கடா சினிமா வேண்டவே வேண்டாம்...எல்லோரும் போய் உண்மையான எதாவது தொழில்பாக்க சொல்லு
Rate this:
06 ஏப், 2020 - 22:28Report Abuse
ராசுசார் இது தமிழ்நாடு. நீங்க ஜப்பானுன்னு நெனச்சு பேசிட்டிருக்கீங்க....
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in