திருமணத்திற்கு பிறகு ஆனந்தி நடிக்கும் தமிழ் படம் | முடிவுக்கு வந்தது அநீதி | பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள் | யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் |
கொரோனா நோயை எதிர்கொள்ளும் விதமாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்த ஔியேற்றும் நிகழ்வுக்கு நாடு முழுக்க அமோக வரவேற்பு கிடைத்தது. திரைப்பிரபலங்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். ரஜினி, அக்ஷய் குமார், நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களது வீடுகளில் தீபம், மெழுவர்த்தி ஏந்தினர்.
கொரோனா எனும் கொடிய உயிர்க்கொல்லி நோய், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். குறிப்பாக 21 நாள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இருவாரங்களுக்கு முன் இந்த நோயை எதிர்த்து போராடும் டாக்டர்கள், செவிலியவர்கள் மற்றும் இன்னும் பிற பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாட்டு மக்கள் அனைவரையும் கைதட்டி சொல்லி அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு நாடு முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்தது.
ரஜினி மனைவி லதா உடன்.
அக்ஷய் குமார்
அதேப்போல் இந்த நோய் எனும் இருட்டை ஔி எனும் வௌிச்சம் கொண்டு விரட்டி அடிப்போம் என்கிற ரீதியில் மக்கள் மத்தியில் நேர்மறையான சிந்தனைகள் வர வேண்டும் என்பதற்காக இன்று(ஏப்.,5) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து, அதற்கு பதிலாக அகல்விளக்கும், மெழுவர்த்தி, செல்போன் டார்ச்லைட் அடித்து ஔி ஏற்றுங்கள் என நாட்டு மக்களுக்கு சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்திருந்தார் பிரதமர் மோடி.
விஜயகாந்த் குடும்பத்தினர்
நயன்தாரா
அதன்படி நாடெக்கும் இதை அனைத்து தர மக்கள், சாதி, மதங்களை கடந்து தங்களது இல்லத்தில் ஔியேற்றினர். திரைப்பிரபலங்களும் இதை ஆதரித்து தங்களது வீட்டில் இருந்தபடி ஔி ஏற்றினார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா உடன் வீட்டு வாசலில் மெழுகுவர்த்தி ஏந்தினார். இதேப்போன்று ராகவா லாரன்ஸ் அவரது குடும்பத்தினர் உடன் டார்ச்லைட் கொண்டு ஔி ஏற்றினார். நயன்தாரா, கவுதமி, ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார், விஜயகாந்த் குடும்பத்தினர், சவுந்தர்யா ரஜினிகாந்த், நாகர்ஜூனா, அமலா குடும்பத்தினர், சிரஞ்சீவி குடும்பத்தினர், ஆர்த்தி - கணேஷ், ரோபோ சங்கர் குடும்பத்தினர், டான்ஸ் மாஸ்டர் கலா, ஹன்சிகா, சூரி, பிரபு, சுரபி, தமன்னா, தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், பூஜா ஹெக்டே, நிக்கி கல்ராணி, கிர்த்தி கர்பந்தா, கங்கனா, பிரணிதா சுபாஷ் உள்ளிட்ட பலரும் தங்களது இல்லங்களில் ஔியேற்றினர்.
டாப்சி, பார்வதி நாயர், சோனியா அகர்வால், ரம்யா பாண்டியன், ஸ்ரேயா, பாடகி சித்ரா, அர்ஜுன். உள்ளிட்ட நடிகர் நடிகைகள் விளக்கு ஏற்றினர். அதேபோல், அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, கத்ரீனா கைப், மகேஷ்பாபு, கரண் ஜோகர், கங்கனா, கரீஷ்மா கபூர், லதா மங்கேஷ்கர், ரித்தேஷ், ஜெனிலியா, அனுபம் கெர், ஷில்பா ஷெட்டி ஆகியோரும் விளக்கேற்றினர்.
சிரஞ்சீவி குடும்பத்தினர்
நாகார்ஜூனா குடும்பத்தினர்.
கவுதமி.
கொரோனா ஒற்றுமைக்கு கூட பங்குபெறாத நடிகர்கள்
இந்திய மக்கள்
மற்றும் ரசிகர்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும், கமல், விஜய்,
அஜித், தனுஷ், சிம்பு, விஷால், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம்
ரவி, ஸ்ருதிஹாசன், ஆர்யா, சாயிஷா, த்ரிஷா, ரகுல் ப்ரீத் சிங், ஷங்கர்,
ரஹ்மான், இமான், யுவன் ஷங்கர் ராஜா, அட்லீ, முருகதாஸ், கார்த்திக்
சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ், பிரியா பவானி சங்கர் ஆகியோர் விளக்கு
ஏற்றவில்லை. பிரதமர் வேண்டுகோளை ஏற்று, எதிர்க்கட்சி தலைவர்கள்
விளக்கேற்றினர். இது ஒற்றுமையை காட்டியதுடன், கொரோனா குறித்த
விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. இதற்காகவாவது நடிகர்கள் விளக்கேற்றி
இருக்க வேண்டும் என அவர்களது ரசிகர்கள் தெரிவித்தனர்.
ராகவா லாரன்ஸ் குடும்பத்தினர்.
ஆர்த்தி – கணேஷ்
சவுந்தர்யா ரஜினிகாந்த்.
டான்ஸ் மாஸ்டர் கலா.
ஹன்சிகா
சூரி தனது குழந்தைகளுடன்
நடிகர் பிரபு
நடிகை தமன்னா குடும்பத்தினர் உடன்.
நடிகை நிக்கி கல்ராணி
நடிகை கிர்த்தி கர்பந்தா
நடிகை கங்கனா மற்றும் நண்பர்கள்.
நடிகை சுரபி
நடிகை பூஜா ஹெக்டே
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்.