Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குழந்தைக்கு இரவில் ஆயில் மசாஜ் குளியல் சரியா? - சுஜா டிப்ஸ்

03 ஏப், 2020 - 23:21 IST
எழுத்தின் அளவு:
Suja-varunee-tips-for-baby-oil-bath-at-night

பல படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் நடிகை சுஜா வருணியை பிரபலமாக்கியது. மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவக்குமாரை நீண்டகாலமாக காதலித்து வந்தவர், கடந்த 2018ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில், மகன் உடன் இருக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும், தாய்மையின் மகத்துவத்தையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டே வருகிறார் சுஜா.




இந்நிலையில் மகனை இரவு 8 மணிக்கு ஆயில் மசாஜ் செய்து குளிப்பாட்டும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சுஜா. இதுகுறித்து அவர் கூறுகையில், மாலையில் குளிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். நான் என் மருத்துவரின் ஆலோசனைப்படி பெரும்பாலும் என் மகனை இரவு 8 மணிக்கு தான் ஆயில் மசாஜ் செய்து குளிப்பாட்டுவேன். இப்படி செய்வதால் இரவில் குழந்தைகள் உடல்வலி இன்றி நன்றாக தூங்குவார்கள். ஒரு தாய் என்ற முறையில் எனது குழந்தைக்கு எது சிறந்தது என்பதை நான் அறிவேன். நீங்கள் உங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி குழந்தைகளை குளிக்க வையுங்கள். ஏனென்றால் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்றவை ஏற்படலாம். ஆகவே அவர்கள் சொல்படி கேட்டு குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல குளியல் கொடுங்கள்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ராஜமவுலி படத்தில் விஜய் - உண்மையா?ராஜமவுலி படத்தில் விஜய் - உண்மையா? வேண்டுகோள்! வேண்டுகோள்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

04 ஏப், 2020 - 12:30 Report Abuse
Anandan சிவாஜி வீட்டு கொள்ளுப்பேரன்
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
04 ஏப், 2020 - 08:21 Report Abuse
Nallavan Nallavan குளிக்க வைத்துவிட்டு உணவு கொடுத்தால் உணவை உண்ட உடனேயே அதாவது உணவு ஓரளவு செரிப்பதற்கு முன்னரே உறங்க வாய்ப்பிருக்கிறது.. உணவைக் கொடுத்துவிட்டு உடனே குளிக்க வைப்பதும் தவறு... உணவு செரிக்கப்படுவதில் பிரச்னை வரும்.... இரவு எட்டு மணிக்கு குளிக்க வைத்து, உறங்க வைக்கவேண்டும் என்றால் பெற்றோர் குழந்தையின் தொல்லையின்றி இரவைக் கழிக்க விரும்புகிறார்கள் என்று பொருள் ..... புரிகிறது .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in