சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகி, நடிகை ஸ்ரீப்ரியா டுவிட்டரில் பதிவிட்ட வீடியோ: செய்திகளை பார்க்கும் போதும், காட்சிகளை காணும் போதும், இளைஞர்கள் நடந்து கொள்ளும் விதம் வருத்தமாக உள்ளது.
வீட்டுக்குள்ளேயே இருக்க, இன்றைய இளைஞர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. மருத்துவர்களுக்கும், போலீசாருக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும், நாம் வீட்டில் இருந்தே, நன்றி சொல்ல வேண்டியது அவசியம். பலரும் தன்னலம் பார்க்காமல், சேவைப் பணியில் உள்ளனர். இவர்களுக்கு கைகூப்பி நன்றி சொல்லி, நாம் வீட்டிலேயே இருக்க வேண்டும். கிராமங்களில், பள்ளி மாணவியருக்கு, மாதவிடாய் காலத்தில், நாப்கின் கிடைப்பது, தற்போது அரிதாக உள்ளது.
பல இளம்பெண்கள், மாதவிடாய் என, சொல்லக் கூட கூச்சப்படுவர். அதனால், இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அந்தந்த பகுதியில் உள்ள மருந்தகங்களில், பள்ளி அடையாள அட்டையை காண்பித்தால், நாப்கின் இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.