Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஹாலிவுட்' பக்கம் என்ன சத்தம்? - ஹாலோவீன் கில்ஸ்

03 ஏப், 2020 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Hollywood-movie-Halloween-kills

பேய்கள் திருவிழாவில் 'ஹாலோவீன்' என, பேய்களுக்கான திருவிழாவை, அமெரிக்கர்கள், ஆண்டுதோறும், அக்டோபரில் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம், எலும்புக்கூடு, சூனியக்கார பொம்மை என, பலவிதமான வேடங்கள் அணிந்து, அமெரிக்கர்கள் கொண்டாடுவர். அந்த விழாவை கணக்கிட்டு, ஹாலோவீன் பட வரிசைகள், அக்டோபரில் வெளியாகும்.

கடந்த, 1978ல், ஜான் கார்பென்டர் இயக்கத்தில், ஹாலோவீன் படம் வெளியானது. ஹாலோவீன் விழாவில், முதல் கொலை அரங்கேறும். மைக்கேல் மையர்ஸ் என்ற, சைக்கோவால் நிகழும், அடுத்தடுத்த கொடூர கொலைகள் தான், படம் முழுவதும். மென்மையான இதயமுள்ளோர், தியேட்டர் பக்கம் கூட செல்லக் கூடாது!

இப்படம், அதிரிபுதிரி ஹிட் அடித்தது. அதன் பின் என்ன... ஹாலிவுட் வழக்கப்படி, அதன் பாகங்கள் வெளியாக துவங்கின. எந்த பாகத்தையும், ஜான் கார்பென்டர் இயக்கவில்லை. அடுத்தடுத்து, 10 பாகங்கள் வெளியானாலும், முதல் பாகம் கொட்டிய வசூல் மழைக்கு, நிகரான வெற்றியை பெறவில்லை. இதற்கிடையில், நாவல், காமிக்ஸ், வீடியோ கேம்ஸ் என, ஹாலோவீன் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது.

இதையடுத்து, 11வது பாகமாக, 2018ல், டேவிட் கார்டன் கிரீன் இயக்கத்தில், ஹாலோவீன் என்ற பெயரிலேயே படம் வெளியானது. ராட்சச கொலைகாரனாக, நிக் காஸ்டில், ரசிகர்களை திக் திக் மனநிலையில் வைத்திருந்தார். முதல் பாகத்தில் நடித்த, ஜேமி லீ கர்டிஸ், இப்படத்தில், பாட்டி வேடத்தில் நடித்து, பெரும் வரவேற்பை பெற்றார்.

இதுவரை வெளியான, 11 பாகங்களில், 1978 மற்றும் 2018ல் வெளியான, ஹாலோவீன் படங்கள் தான், பெரும் வெற்றி பெற்றன. அதற்காக, மற்ற படங்கள், தோல்வி என, கருதக் கூடாது; அவை, வெற்றி பெற்றன... அவ்வளவு தான். மீண்டும், டேவிட் கார்டன் கிரீன் இயக்கத்தில், 12வது பாகமாக, ஹாலோவீன் கில்ஸ், வரும், அக்., 16ம் தேதி வெளியாக உள்ளது. படத்தை, 'யூனிவர்சல் பிக்சர்ஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. மேலும், 13வது பாகமாக, ஹாலோவீன் என்ட்ஸ் படம், 2021 அக்.,15ல் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நல்ல மனமில்லாத நடிகர், நடிகையர் - பெப்சிநல்ல மனமில்லாத நடிகர், நடிகையர் - ... மாணவியருக்கு இலவச நாப்கின் : ஸ்ரீப்ரியா வேண்டுகோள் மாணவியருக்கு இலவச நாப்கின் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in