அனைத்து ஹீரோ படங்களும் வெளியாகும் ஆண்டாக 2022 அமையுமா? | விமான நிலையத்தில் பூஜா ஹெக்டேவிற்கு இன்ப அதிர்ச்சி | மகாபலிபுரத்துக்கு சுற்றுலா சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் | கிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள் | மனைவியின் ஓராண்டு நினைவு தினம் : அருண்ராஜா காமராஜ் உருக்கம் | கேஜிஎப் 2வால் ஷங்கருக்கு ஏற்பட்ட பெரியப்பா அனுபவம் | விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்? | தனுஷின் தயாரிப்பு நிறுவன யு-டியூப் பக்கம் முடக்கம் | 'சலார்' - பிரமோஷன் வேலைகள் இனிதே ஆரம்பம் | செளந்தர்யாவிடம் மட்டும் தான் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் - விக்னேஷ் கார்த்திக் |
சினிமா தொழிலாளர்களுக்காக, தமிழ் நடிகர், நடிகையர், மற்ற மாநிலங்களை போல, அள்ளித் தர வேண்டும் என, பெப்சி அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
திரைப்பட தொழிலை மட்டுமே நம்பியுள்ள, 25 ஆயிரம் தொழிலாளர்கள், ஊரடங்கால் வேலை இன்றி வாடுகின்றனர். இவர்களுக்கு உதவ வேண்டும் என, தென் இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான, பெப்சி அமைப்பு வேண்டுகோள் விடுத்தது. அதை ஏற்று, ரஜினி, சிவகுமார் குடும்பத்தினர், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், யோகிபாபு, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பலரும், பணமாகவும், அரிசியாகவும் உதவிகளை வழங்கினர்.
பிற மொழி நடிகர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோடிகளில் நிதி உதவி அளித்துள்ளனர். அக்ஷய் ரூ.25 கோடி, தெலுங்கு நடிகர் பிரபாஸ், ரூ.4 கோடி, பவண் கல்யாண் 2 கோடி, நாகார்ஜுனா, 1 கோடி ரூபாய் என அவரவர் சொந்த மாநிலங்களில் வழங்கி உள்ளனர். ஆனால், தமிழ் திரையுலகில், அதிகபட்சமாக, ரஜினி மட்டுமே, 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதுவரை, 1.60 கோடி ரூபாயும், 25 கிலோ எடையுடைய, 1,983 அரிசி மூட்டைகளும், பெப்சிக்கு கிடைத்துள்ளன.
‛ 25ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட பெப்சிக்கு, இதுவரை பெறப்பட்ட உதவிகள் மூலம், ஒருவருக்கு, 500 ரூபாய் பணம், 25 கிலோ அரசி மூட்டை ஒன்று தருவது, இயலாத நிலையில் உள்ளது' என, பெப்சி கூறியுள்ளது.
இதுகுறித்து பெப்சி நிர்வாகிகள் கூறுகையில், ‛தமிழ் திரைப்படத் துறையில் நல்ல நிலையில் உள்ள நடிகர், நடிகையர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், முன்னுாதாரணம் இல்லாத இந்தமாதிரியான சிரமமமான சூழ்நிலையில், திரைப்படத் தொழிலாளர்களை காப்பாற்ற நிதி அளிப்பீர். 25 ஆயிரம் உறுப்பினர்களில் 18 ஆயிரம் பேர் தினக்கூலிகள் ஆவர். இவர்கள் பல மாவட்டங்களில் இருந்து சென்னையில் குடியேறியவர்கள். பலருக்கு ரேஷன்கார்டு கூட கிடையாது. அவர்களுக்கு உதவி செய்ய, இந்த நேரத்தில் கூட, மனம் வரவில்லை என்றால் எப்படி?' என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.