தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளது. கொரோனாவை எதிர்த்து போராட மத்திய மாநில அரசுகள் நிதி திரட்டுகிறது, தெலுங்கு மற்றும் பாலிவுட் நடிகர்கள் தாராளமாக நிதி வழங்கி வருகிறார்கள். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ் சினிமா நட்சதிரங்களின் பங்களிப்பு மிக மிக குறைவாக உள்ளது.
இந்நிலையில் பழம்பெரும் நடிகை லதாவின் குடும்பத்தினர் சார்பில் அவரது சகோதரர் ராஜ்குமார் சேதுபதி, அவரது மனைவியும் நடிகையுமான ஸ்ரீப்ரியா, இவர்களுடைய மகள் சிநேகா, மகன் அர்ஜுன் ஆகியோர் சார்பில் 30 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளனர். மத்திய அரசுக்கு 15 லட்சமும், தமிழக அரசுக்கு 15 லட்சமும் வழங்கி உள்ளனர்.
ரூ.15 லட்சத்திற்கான நிதியை காசோலை வாயிலாக தமிழக அரசு தலைமை செயலர் சண்முகத்திடம் வழங்கினார் நடிகை லதா.