அனைத்து ஹீரோ படங்களும் வெளியாகும் ஆண்டாக 2022 அமையுமா? | விமான நிலையத்தில் பூஜா ஹெக்டேவிற்கு இன்ப அதிர்ச்சி | மகாபலிபுரத்துக்கு சுற்றுலா சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் | கிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள் | மனைவியின் ஓராண்டு நினைவு தினம் : அருண்ராஜா காமராஜ் உருக்கம் | கேஜிஎப் 2வால் ஷங்கருக்கு ஏற்பட்ட பெரியப்பா அனுபவம் | விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்? | தனுஷின் தயாரிப்பு நிறுவன யு-டியூப் பக்கம் முடக்கம் | 'சலார்' - பிரமோஷன் வேலைகள் இனிதே ஆரம்பம் | செளந்தர்யாவிடம் மட்டும் தான் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் - விக்னேஷ் கார்த்திக் |
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரானோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இயற்கைப் பேரிடர் எது வந்தாலும் மக்கள் தாங்களாகவே முன் வந்து உதவி செய்வார்கள். ஆனால், இந்த கொரானோ வெளியில் சென்றாலே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரவும் வாய்ப்புள்ளது. எனவேதான், நாட்டில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு மேலும் பல உதவிகள் செய்ய நிதி தேவைப்படுவதால் மத்திய, மாநில அரசுகள் மக்களிடம் உதவி கோரி வருகின்றன. தெலுங்கு, ஹிந்தி நடிகர்கள் பலரும் பிரதமரின் நிவாரண நிதி, மாநில முதல்வர்களின் நிவாரண நிதி என கோடிகளிலும், லட்சங்களிலும் அவரவர் நிலைக்கேற்பக் கொடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் 25 லட்ச ரூபாய் அளித்துள்ளார். மற்ற யாருமே இதுவரை எந்த உதவித் தொகையும் அறிவிக்கவில்லை. குறிப்பாக இன்றைய முன்னணி நடிகர்களில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் விஜய், அஜித் ஆகியோர் எந்த ஒரு உதவித் தொகையும் அறிவிக்காதது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் ஒரு தொகையை அறிவித்து தங்களது ரசிகர்களையும் உதவி செய்ய சொல்லிக் கேட்டால் பலரும் முன்வருவார்கள்.
தங்களது திரைப்படங்கள் வெளியாகும் போது அதிகாலை காட்சி வேண்டும், நடு இரவு காட்சி வேண்டும் என அரசுக்கு தங்கள் தயாரிப்பாளர்கள் மூலம் கோரிக்கை வைக்கும் விஜய், அஜித் ஆகியோர் இந்த சமயத்தில் அரசின் கோரிக்கையை காதில் வாங்காமல் இருப்பது ஆச்சரியம்தான்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் கூட முதல்வர், பிரதமர் நிவாரணநிதிக்கு இன்னும் எந்தத் தொகையும் வழங்கவில்லை. அவர்களே தராத போது நடிகைகள் மட்டும் தருவார்களா என்ன ?. நாட்டுப்பற்று என்பது சுதந்திர தினம், குடியரசு தினம், போர்க்காலங்களில் மட்டும் தான் வரவேண்டும் என்பதில்லை. இம்மாதிரியான இக்கட்டான சூழலிலும் வர வேண்டும்.