Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்விழா படங்கள்: ஹாலிவுட் பாணியில் உருவான 'காலம் வெல்லும்'

01 ஏப், 2020 - 15:57 IST
எழுத்தின் அளவு:
Kallam-Vellum-Movie

ஆங்கில படங்களின் பாணியில் தமிழில் படம் நடித்தவர்களில் முக்கியமானவர் ஜெய்சங்கர். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பாணியில் பல படங்களில் நடித்தார். இதனால் அவர் தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட் என்று செல்லமாக அழைக்கப்பட்டார். அதேபோல ஹாலிவுட்டில் பிரபலமாகி வந்த கவ்பாய் படங்களின் பாணியிலும் சில படங்களில் நடித்தார். அதில் முக்கியமான படம் காலம் வெல்லும்.

இதனை ஒளிப்பதிவாளரும், அன்றைய ஆக்ஷன் பட இயக்குனருமான கர்ணன் இயக்கினார். இந்தப் படத்தில் வந்த குதிரை ரேஸ்களும், சண்டை காட்சிகளும் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. இதில் ஜெய் சங்கருடன் விஜயகுமாரி, விஜயலலிதா, நாகேஷ், சுருளிராஜன், ஓ.ஏ.கே.தேவர், எம்.ஆர்.ஆர்.வாசு, காந்திமதி, காத்தாடி ராமமூர்த்தி உள்பட பலர் நடித்திருந்தனர். சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார்.

ஜெய்சங்கர் ஒரு சாதாரண விவசாயி. ஊர் பண்ணையாரான ஓ.ஏ.கே தேவர் விவசாயிகளை கொடுமைப்படுத்துவார். அதை தட்டி கேட்கும் விவசாயிகளை கொடுமைப்படுத்துவார். ஜெய்சங்கரின் தங்கை வாழ்க்கையை அவரது தம்பி நாசமாக்கி விடுவார். இதனால் ஆத்திரமடையும் ஜெய்சங்கர் ஓ.ஏ.கே தேவரின் தம்பியை கொன்று விடுவார்.

இதனால் அவரை போலீஸ் தேடுகிறது. தலைமறைவாகும் ஜெய்சங்கர் கவ்பாய் பாணியிலான குதிரை கொள்ளை கூட்டத்தில் சேர்ந்த விடுவார். தன் திறமையால் அந்த கூட்டத்தின் தலைவனாகி பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து ஏழைகளுக்கு கொடுப்பார். பின்னர் கொடியவர்களை அழித்து விட்டு போலீசில் சரணடைவார். இதுதான் படத்தின் கதை. பயங்கர சண்டை காட்சிகள் நிறைந்த படம் என்றே விளம்பரம் செய்யப்பட்டது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நலிந்த கலைஞர்களுக்கு உதவுங்கள்: அமைச்சருக்கு நாசர் கோரிக்கை மனுநலிந்த கலைஞர்களுக்கு உதவுங்கள்: ... திடீர் கவனம் பெறும் மலையாள வைரஸ் திடீர் கவனம் பெறும் மலையாள வைரஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vaduvooraan - Chennai ,இந்தியா
08 ஏப், 2020 - 13:07 Report Abuse
Vaduvooraan நிறைய காட்சிகளில் zoom lens பயன் படுத்தி உருவங்களை பூதாகரமாக காட்டி இருப்பார்கள் ஆக்ஸன் படம் என்பதற்காக சங்கர் கணேஷ் ஊரில் கிடைக்கிற இசை கருவிகளை எல்லாம் கொண்டு வந்து கத்தி ஒரு வழி பண்ணி இருப்பார்கள். இந்த நாள் அளவீடுகளை வைத்து பார்த்தாலே நடிகைகள் ஆடை அலங்காரங்கள் வாயை பிளக்க வைக்கும் ஆபாசத்தோடு இருக்கும். துரத்திக்கொண்டு ஓடும் வில்லன் தென்னை மரத்தில் ஏறப்போயி...என்ன லாஜிக்கோ தென்னை மரத்தில் ஒரு சண்டை காட்சி இதே மாதிரி மெக்கெனஸ் கொடு திரைப்படத்தினால் உந்தப்பட்டு கிட்டத்தட்ட இதே நடிகர்களை வைத்து எங்க பாட்டன் சொத்து என்று ஒரு படம்...எதற்கு வம்பு? வேண்டாம் இதோடு நிறுத்தி கொள்கிறேன் வேறு வேலையே இல்லாமல் வெட்டியாக திரிந்து கொண்டிருந்தாயா என்று கேட்கக்கூடும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in