அரசியல் ரசிகர்களுக்கு மே 2 : அஜித் ரசிகர்களுக்கு மே 1 | ஐதராபாத்தில் ரத்தாகும் படப்பிடிப்புகள் : 'அண்ணாத்த' நிலை என்ன ? | இன்று முதல் 3 காட்சிகள் மட்டுமே... | "மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் |
கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 19ந் தேதி முதல் அனைத்து திரைப்பட பணிகளும் நிறுத்தப்பட்டது. இதனால் துணை நடிகர்கள், நடிகைகள் பட வாய்ப்புகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் திரைப்படங்களில் நடிக்கும் துணை நடிகர், நடிகையர்கள் சுமார் 1500 உறுப்பினர்களும் மற்றும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலுள்ள நாடக கலைஞர்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அரசு அறிவித்துள்ளது. இதனால் திரைப்பட படப்பிடிப்புகளும் மாவட்டங்களில் நடைபெற இருந்த நாடக விழாக்களும் நடைபெறாமல் போனதால் அதையே நம்பி இருக்கும் அன்றாடம் ஊதியம் பெறும் திரைப்படம், நாடகம் ஆகிய துறைகளில் உள்ள கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையுள்ள நலிந்த கலைஞர்கள் உட்பட அனைவரும் தங்கள் அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே, தாங்கள் இதனை கருத்திற்கொண்டு, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு திரைப்படத்துறை நல வாரியம் மூலம் உதவி செய்ய பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.