Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா நிதி - சிரஞ்சீவி வசூலித்துள்ள ரூ.6 கோடி

01 ஏப், 2020 - 13:29 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-collected-Rs.6-crore-to-help-cinema-workers

பெப்ஸி என்ற அமைப்பின் விரிவாக்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு. பல்வேறு திரைப்படத் தொழிலாளர் சங்கங்கள் இணைந்த அமைப்பு இது. இந்த சங்கத்தின் பெயர்தான் தென்னிந்திய என்று இருக்குமே தவிர இதில் தமிழ் திரைப்படத் தொழிலாளர்கள்தான் அதிகம். இதில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் தற்போதைய ஊரடங்கால் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இவர்களுக்காகத்தான் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி உதவிகள் கேட்டார். தமிழ் நடிகர்கள் கொடுத்த நிதியுதவி 1 கோடியைக் கூட இன்னும் தாண்டவில்லை.

ஆனால், தெலுங்கில் தொழிலாளர்களுக்கு என வேறு ஒரு அமைப்பு உள்ளது. அவர்களுக்காக தெலுங்கு நடிகர்கள் ஒரு டிரஸ்ட் கணக்கை ஆரம்பித்து அதன் மூலம் நிதியுதவி அளித்து வருகிறார்கள். அதை நடிகர் சிரஞ்சீவி முன்னெடுத்தார். அதனால், நிதியுதவி 6 கோடியைத் தாண்டியுள்ளது. இன்னும் பலர் தினமும் நிதியுதவி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தெலுங்கில் அவர்களது தொழிலாளர்களுக்காக சிரஞ்சீவி முன்னெடுத்து அவ்வளவு தொகையை சேர்த்து வருகிறார். ஆனால், தமிழ் தொழிலாளர்களுக்காக இங்குள்ள நடிகர்கள் யாருமே அதிகம் கவலைப்படுவது போலத் ரியவில்லை.

ரஜினிகாந்த் மட்டுமே அதிகபட்சமாக 50 லட்சம் அளித்தார். சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் தலா 10 லட்சம் அளித்தனர். ஜெயம் ரவி 5 லட்சம் அளித்தார். கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சிம்பு ஆகியோர் இன்னும் எந்தவிதமான உதவியும் அளிக்கவில்லை.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
யார் பார்த்த வேலை? - லாஸ்லியா பெயரில் பரவிய போலி ஆபாச வீடியோயார் பார்த்த வேலை? - லாஸ்லியா பெயரில் ... 10 கோடி பார்வையில் 'காந்தக் கண்ணழகி'.... 10 கோடி பார்வையில் 'காந்தக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

01 ஏப், 2020 - 15:41 Report Abuse
சந்திரசேகர் பணம் இருப்பதால் மட்டும் ஒருவர் தர்மம் செய்து விட முடியாது. அதற்கு பெரிய மனது வேண்டும். நூறு ரூபாய் சம்பாதித்து பத்து ரூபாய் எவன் ஒருவன் தர்மம் செய்கிறானோ அவன்தான் பணக்காரன். மற்றவர் பணம் இருந்தும் ஏழைகள் தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in