Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா பரவ யார் காரணம்? - பிரகாஷ்ராஜ்

31 மார், 2020 - 19:32 IST
எழுத்தின் அளவு:
Who-is-spreading-Corona---Prakashraj-replied

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்தே, சமூக விலகலை கடைபிடிக்கச் சொல்லி வலியுறுத்திய மத்திய அரசு, அதற்காக நாடு முழுவதும் இருபத்தோரு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கிறது. அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும்; வெளியே வரக் கூடாது என்பதற்காகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இருந்த போதும், மக்கள் காய் கறி வாங்குகிறோம்; மருந்து வாங்குகிறோம்; மளிகைப் பொருட்கள் வாங்குகிறோம் எனக் கூறி, கூட்டம் கூட்டமாக பொது இடங்களுக்கு வந்து கூடுகின்றனர். இதனால், கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியாத சூழல்தான் உருவாகும் என, அதிகாரிகளும், மருத்துவர்களும் கதறுகின்றனர். வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் கூறி வெளியிடப்படும் விழிப்புணர்வு செய்திகளெல்லாம் கிடப்பில் போடப்பட்டு, மக்கள் கொத்து கொத்தாக வீதிகளில் உலாவருவதைக் கண்டு, பலரும் பதறுகின்றனர்.

மக்களின் இந்த பொறுப்பற்ற செயல், கொரோனா சமூக பரவலாக மாறுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை கடுமையாக கண்டித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டு இருக்கிறார் பிரபல கன்னட நடிகரான பிரகாஷ் ராஜ். அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தானாக பரவவில்லை. பொதுமக்கள்தான் பரப்புகின்றனர். அனைவரும் வீட்டிலேயே இருந்து, உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு உதவுங்கள். பொறுப்போடு செயல்படுங்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். குழந்தைகள் எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள். நான், எனது மகனோடு வீட்டில் இருந்துதான் நேரத்தை கழிக்கிறேன். நாம் அப்படி செய்யவில்லை என்றால், கொரோனா தன் பாதிப்பை நம் மீது காட்டிவிடும்.

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (28) கருத்தைப் பதிவு செய்ய
நான்கு ரூபாயில் தரமான சாப்பாடு - அசத்தும் ரோஜாநான்கு ரூபாயில் தரமான சாப்பாடு - ... அருவா மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் பூஜா ஹெக்டே அருவா மூலம் மீண்டும் தமிழுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (28)

தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
27 மே, 2020 - 13:55 Report Abuse
தாமரை செல்வன்-பழநி என்ன பிரகாசூ... கொரானா பரவ மோடிதான் காரணமுன்னு பேசிக்கிறாங்க. இப்படிப் பொசுக்குன்னு மக்களோட பொறுப்பில்லாத தனமுன்னு பேசுனா எப்பூடி?
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
19 மே, 2020 - 15:01 Report Abuse
madhavan rajan கடையைத் திறந்து வைத்துவிட்டு யாரும் வெளியே வராதீர்கள் என்றால் எதற்கு கடையைத் திறக்க வேண்டும்? அவசியமானவர்கள் வாருங்கள் என்றால் அவர்கள் மூலமாக பரவாதா? அரசின் கொள்கையே இடிக்குதே? இப்போது சென்னையில் சமூக விலகலை மீறி கோயம்பேடு போன்ற இடங்களில் ஐந்தாயிரம் பேர் கூட அனுமதித்தது யார்? அரசுதான் இதற்கு பொறுப்பு. அப்போது அரசின் அலட்சியத்தால்தான் இது பரவியது. தெருவில் செல்லும் ஆட்களை தட்டிக்கொண்டு அடிக்கிறீர்கள். வண்டியை பிடிங்கி வைத்துக்கொள்கிறீர்கள். வழக்கு பதிவு செய்து காசு வாங்குகிறீர்கள். ஐயாயிரம் பேர் கூடும்போது கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கிறது அரசு. இது யாருடைய அலட்சியம். அரசின் நிர்வாகத்திறமையின்மைதான் முழுக்காரணம் நோய்த் தோற்று பரவுவதற்கு.
Rate this:
B.s. Pillai - MUMBAI,இந்தியா
07 ஏப், 2020 - 07:13 Report Abuse
B.s. Pillai No religion is complete, if it does not preach social responsibilities to its followers. The Prophet has already said that the duty of a muslim is to do prayers five times a day.There is not necessary for another parallel Jamt to preach this, ignoring the social responsibilities of the members. Apart from this, these people had behaved in a violent way towards the health officials and the Police and Govt. servants who approached them for safeguarding these persons from the pandemic by throwing stones and spitting on them. It is another way of terrorist activities. It has to be condemned severely and dealt by Law as as terrorists.
Rate this:
123 - chn,இந்தியா
03 ஏப், 2020 - 16:51 Report Abuse
123 வந்துட்டார்யா
Rate this:
Murthy - Bangalore,இந்தியா
03 ஏப், 2020 - 13:50 Report Abuse
Murthy மக்களை குறைகூறாதவர்களே இல்லை போலும். அரசின் பொறுப்பற்ற செயலுக்கு மக்கள் பலியாகி உள்ளார்கள். மக்கள் செய்த தவறு பொறுப்பற்ற அரசை தேர்ந்தெடுத்தது தான்.சில லட்சம் மக்களை (foreign returners and foreign travellers) தனிமைப்படுத்தமுடியாத அரசு இன்று பல கோடி மக்களை தனிமைப்படுத்தி பொருளாதார நெருக்கடியை உருவாக்கிவிட்டது. இருட்டா இருந்தா கொரோன வந்து பாத்துட்டு யாரும் இல்லைன்னு போயிரும் என்று மோடி சொல்கிறார்.
Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in