Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான்கு ரூபாயில் தரமான சாப்பாடு - அசத்தும் ரோஜா

31 மார், 2020 - 19:28 IST
எழுத்தின் அளவு:
Actress-Roja-providing-Food-for-Rs.4

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆந்திர மாநிலம் நகரி மற்றும் புத்தூர் நகர சபைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு என்பது பிரச்சினையாகவே இருக்கிறது.

இதையறிந்ததும், நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.,வும்; நடிகையுமான ரோஜா, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவை நான்கு ரூபாய்க்கு வழங்கி வருகிறார். இது குறித்து, நடிகை ரோஜா கூறியிருப்பதாவது:

இப்படி பலதரப்பட்ட மக்களும் கொரோனாவால் போடப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தது. அவர்களுக்கு, குறைந்த விலையில் தரமான உணவு கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தேன். இதற்காக, என்னுடைய சாரிடபிள் ட்ரஸ்ட் மூலம் குறைந்த விலையில், உணவு அளிக்க முடிவெடுத்தேன். முதலில் குறைந்த எண்ணிக்கையில் சமையல் செய்து குறைந்த விலைக்குக் கொடுக்கப்பட்டது. பின், தேவை அதிகமாக இருந்ததால், தற்போது உணவுக் கூடத்தை விரிவுபடுத்தி விட்டோம். நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரம் பேருக்கு சமையல் நடக்கிறது. நான்கு ரூபாய்க்கு தரமான சாப்பாடு வழங்கி வருகிறோம். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். செல்வந்தர்கள் அனைவரும் இப்படிப்பட்ட பேரிடர் நிலையில், ஏழைகளை காக்க உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவுக்கு நிதி - சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் உதவி, மற்றவர்கள் எப்போது?கொரோனாவுக்கு நிதி - ... கொரோனா பரவ யார் காரணம்? - பிரகாஷ்ராஜ் கொரோனா பரவ யார் காரணம்? - பிரகாஷ்ராஜ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vira - tamil naadu,இந்தியா
31 மார், 2020 - 22:13 Report Abuse
vira உங்கள மாதிரி எல்லோரும் இருந்தால் நம் நாடு இன்னும் வளரும் உங்கள் சேவை வளரட்டும் நன்றி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in