Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனாவுக்கு நிதி - சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் உதவி, மற்றவர்கள் எப்போது?

31 மார், 2020 - 16:37 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-donates-Rs.25-lakhs-to-CM-relief-fund

கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் ஸ்தம்பித்துள்ளது. இதிலிருந்து முழுமையாக மீள மாதங்கள் ஆகும் என்கின்றனர். இதில் மீளும் நடவடிக்கைக்காக நிதி உதவி வழங்கும்படி பிரதமர் மோடியும், தமிழகம் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹிந்தியில் அக்ஷய் குமார் ரூ.25 கோடி, தெலுங்கில் பிரபாஸ் ரூ.4 கோடி, மகேஷ்பாபு, சிரஞ்சீவி தலா ரூ.1 கோடி அல்லு அர்ஜூன் ரூ.1.25 கோடி என நிதி உதவி அளித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள நடிகர்கள் தாங்கள் சார்ந்த சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் சிலர் நிதி உதவி அளித்தனர். பிரதமருக்கோ, முதல்வரின் நிவாரண நிதிக்கோ ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.

இதுப்பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக முதல் நபராக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே பெப்சி தொழிலாளர்களுக்கும் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். ரூ.50 கோடி, ரூ.80 கோடி என சம்பளம் வாங்கி கொண்டு தங்களை டாப் ஹீரோக்களாக காட்டிக் கொள்ளும் நடிகர்கள் ஒருவர் கூட இன்னும் நிதி உதவி அளிக்காத நிலையில் சிவகார்த்திகேயன் முதல்நபராக அறிவித்து இருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இன்னமும் நடிகர் விஜய், அஜித், விஷால் போன்றவர்கள் தாங்கள் சார்ந்த தொழிலாளர்களுக்கு கூட உதவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
நர்ஸ் வேலையை தவிர்ப்பது ஏன்?: நடிகை ஜூலிநர்ஸ் வேலையை தவிர்ப்பது ஏன்?: நடிகை ... நான்கு ரூபாயில் தரமான சாப்பாடு - அசத்தும் ரோஜா நான்கு ரூபாயில் தரமான சாப்பாடு - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

ranjan - france,பிரான்ஸ்
31 மார், 2020 - 21:54 Report Abuse
ranjan சிவா கஷ்டத்தில் வளர்ந்தவர் அவருக்கு தெரியும் அதன் அருமை வாழ்க வளமுடன்
Rate this:
Vicky - Chennai,இந்தியா
31 மார், 2020 - 21:02 Report Abuse
Vicky தினமலர் நீங்கள் எவ்வளவு நிதி கொடுத்தீர்கள்?
Rate this:
31 மார், 2020 - 19:31 Report Abuse
தினமலர் வாசகன் If they donate, they better do anonymously. Otherwise, intention becomes something different than to truly help the needy.
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
31 மார், 2020 - 19:00 Report Abuse
mindum vasantham vijay sethupathi மட்டையாகும் கால கட்டம் இது ,quarrantine வேற publicity sethupathi மட்டை ஆகிருப்பார்
Rate this:
manikandan P - Chennai,இந்தியா
31 மார், 2020 - 17:04 Report Abuse
manikandan P Why cinema hero have to donate? What about ADMK, DMK, PMK,Congress, BJP, DMDK, other parties.. Especially DMK and ADMK party members like MLA, MP, State secretary, District secretary, Councillors who were looted people money. No one is asking them to give? Why cinema field person has to give? Cine actors are paying tax almost 33% of income tax including other tax....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in