Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நர்ஸ் வேலையை தவிர்ப்பது ஏன்?: நடிகை ஜூலி

31 மார், 2020 - 15:49 IST
எழுத்தின் அளவு:
Julie-replied-why-she-did-not-work-as-nurse-again?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாக களம் இறங்கிப் போராடி, தன்னுடைய உரை வீச்சின் மூலம் பலரையும் கவர்ந்தவர் ஜூலி. அவர் ஏற்கனவே நர்ஸாக பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஜல்லிக்கட்டு மூலம் பிரபலம் அடைந்ததைத் தொடர்ந்து, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு வந்தது. அதில் பங்கெடுத்ததன் மூலம் மேலும் பிரபலமானார். தொடர்ச்சியாக, அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் துவங்கின. சிறு கேரக்டர்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது, கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, சினிமா பிரபலங்கள் எல்லோருமே வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். அதில் ஜூலியும் ஒருவர். ஆனாலும், அவர் சமூக வலைதளங்களில் தன்னுடைய நேரத்தை முழுமையாக செலவிட்டு வருகிறார். அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகர்களோடு ஜூலி கலந்துரையாடுகிறார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் அளிக்கிறார். அப்படியொரு கலந்துரையாடலின் போது, ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் மீண்டும் நர்ஸ் பணிக்குச் செல்லக் கூடாது எனக் கேட்டார்.

அதற்கு ஜூலி, அனைவரும் இதே கேள்வியை என்னிடம் கேட்கின்றனர். நான் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். செவிலியர் பணி என்பது ஒரு புனிதமான தொழில். அதற்கு முழு அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் தேவை. மற்ற வேலைகளைப் போல பணியைப் பகுதி நேர வேலையாகச் செய்ய இயலாது. ஒரே நேரத்தில் இரண்டு பணிகளைச் செய்வது மிகவும் கடினம். ஏனெனில், படப்பிடிப்பினால் வேலைக்குச் செல்வதில் தாமதமாகலாம். நோயாளிகள் காத்திருக்க நேரிடும். நோயாளிகளின் உயிரை என்னால் பணயம் வைக்க இயலாது என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கடைசியாக கிச்சனுக்குள் நுழைந்த ஆண்ட்ரியாகடைசியாக கிச்சனுக்குள் நுழைந்த ... கொரோனாவுக்கு நிதி - சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் உதவி, மற்றவர்கள் எப்போது? கொரோனாவுக்கு நிதி - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

அன்பு - தஞ்சை,இந்தியா
31 மார், 2020 - 21:29 Report Abuse
அன்பு நர்ஸ் வேலைக்கு என்ன சம்பளம் கிடைக்கும்? பொய்கள் சொல்லி கஷ்டப்பட்டு பிரபலம் ஆகி இருக்கார். இப்படி திடீர் என்று அவரை நரகத்திற்கு தள்ளுவதை போன்று சாமானிய மனிதராக்க நினைக்கும் ரசிகரை நினைத்தால், அவருக்கு கோவம் வந்திருக்கும்.
Rate this:
31 மார், 2020 - 20:08 Report Abuse
nurse நேசமணி படிச்சது எல்லாம் மறந்து போய் இருக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in