Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்விழா படங்கள்: காவியத் தலைவி -பெங்காலி படத்தை ரீமேக் செய்த கே.பாலச்சந்தர்

31 மார், 2020 - 12:06 IST
எழுத்தின் அளவு:
Kaviya-Thalaivi-film

பொதுவாக கே.பாலச்சந்தர் வேற்று மொழி படங்களை ரீமேக் செய்வதில்லை. அபூர்வமாக ஒரு சில படங்களை ரீமேக் செய்திருக்கிறார். அவற்றில் முக்கியமானது காவியத் தலைவி. இந்தப் படம், 1963ம் ஆண்டு பெங்காலியில் வெளியான உத்தர் பல்குனி என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை பார்த்த சவுகார் ஜானகி, இதனை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார். அவரே தயாரிக்கவும் முன்வந்தார். அவரின் வேண்டுகோளை ஏற்று ரீமேக் செய்தார் கே.பாலச்சந்தர்.

இதில் ஜெமினி கணேசன், சவுகார் ஜானகி, எம்.ஆர்.ஆர்.வாசு, ரவிச்சந்திரன், எஸ்.வரலட்சுமி, வி.நிர்மலா உள்பட பலர் நடித்திருந்தார்கள். தூறல் நின்னு போச்சு படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சுலக்ஷனா இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். சவுகார் ஜானகி அம்மா, மகள் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

சவுகார் ஜானகி, ஜெமினி கணேசனை தீவிரமாக காதலிப்பார். ஆனால் பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக எம்.ஆர்.ஆர்.வாசுவுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அவர் பெரும் குடிகாரர் .இதனால் அவரை பிரியும் சவுகார் ஜானகி ஐதராபாத் சென்று அங்கு தனியாக வாழ்வார். அங்கு ஒரு பெண் குழந்தையை பெற்று வளர்ப்பார்.

அந்த பெண் வளர்ந்து ஆளாகும்போது அவள் காதலுக்கு எம்.ஆர்.ஆர்.வாசுவால் பிரச்சினை வரும். அதனை ஜெமினி கணேசன் தீர்த்து வைப்பது மாதிரியான கதை. தன் காதலை இழந்த ஜெமினி கணேசன் காதலி மகளின் காதலை சேர்த்து வைக்கிற கதை. இந்தப் படத்திற்காக அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருது பெற்றார் ஜெமினி கணேசன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இணையதளத்தில் வைரலாகும் விஜய் மகள் படம்இணையதளத்தில் வைரலாகும் விஜய் மகள் ... அம்மு அபிராமியின் பேட்டரி அம்மு அபிராமியின் பேட்டரி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in