வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
பாகுபலி படங்களுக்கு பின் மீண்டும் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர்.(ரத்தம் ரணம் ரவுத்ரம்) படத்தில் தமிழ் பதிப்புக்கான வசனம், பாடல்களை எழுதுகிறார் மதன்கார்கி. அவர் கூறுகையில், ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர்களான குமரம் பீம்(ஜுனியர் என்டிஆர்), அல்லூரி ராம ராஜுவின்(ராம் சரண் தேஜா) வாழ்க்கை தான் கதை. ஆங்கிலேயர்களை எதிர்த்து ஒரு பெரும் படையை திரட்டி போரிட்ட இவர்கள், ஒருக்கட்டத்தில் காணாமல் போனார்கள். இவர்கள் பற்றிய விபரம் வரலாற்று பக்கங்களில் கூட இல்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்திருந்தால் போராட்ட களத்தை எப்படி முன்னெடுத்திருப்பார்கள், அவர்களின் நட்பு எப்படி இருந்திருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை கலந்து எடுக்கிறோம். படத்தில் 4 பாடல்கள், ஒரு சிறிய பாடல் உள்ளது. ஜனவரியில் ரிலீஸ் ஆக வேண்டிய படம், தள்ளி போகிறது. படம் வெளியான பின் ஒவ்வொருவர் மனதிலும் நாட்டுப்பற்றை விதைக்கும் என்றார்.