Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிவாரண நிதி - தொடர் அமைதி காக்கும் நடிகர்கள், நடிகைகள்

30 மார், 2020 - 13:54 IST
எழுத்தின் அளவு:
Corona-relief-Fund-:-Tamil-cinema-celebrities-still-keep-silent

உலகம் முழுவதுமே கொரானோ வைரஸ் காரணமாக முடங்கிப் போய் உள்ளது. பல நாடுகள் அதற்கான நிதி நிலைமையை, நாட்டின் பொருளாதாரத்தை எப்படி சமாளிப்பது என திணறிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் பிரதமர், மாநில முதல்வர்கள் மக்கள் முன்வந்து நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். சில பெரிய நிறுவனங்கள், ஹிந்தி நடிகர்கள், தெலுங்கு நடிகர்கள் பலரும் நிதியுதவி அளித்துவிட்டார்கள்.

ஆனால், தமிழ் சினிமா நடிகர்கள் யாருமே இன்னும் முதல்வரின் நிவாரண நிதிக்கோ, பிரதமரின் நிவாரண நிதிக்கோ எந்த நிதியுதவியும் அறிவிக்கவில்லை. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் அவர்கள் சார்ந்த சினிமா துறையில் உள்ள பெப்ஸி தொழிலாளர்களுக்குக் கூட இன்னும் எந்தவிதமான உதவியையும் அறிவிக்கவில்லை.

நடிகைகளில் ஓரிருவரை தவிர பெரும்பாலும் எந்த நிதியுதவியையும் எப்போதுமே வழங்குவதில்லை. நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் கூட படங்களுக்கு கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள்.

சாதாரண மக்கள் கூட தங்களால் முடிந்த 100, 1000, 5000 என உதவிகளை வழங்கும் போது தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகள் அதைக் கூட செய்ய முன்வராதது ஏனோ.?

தங்கள் படங்கள் வெளியானால் அதிகாலை காட்சி வேண்டும் என ரசிகர்களை விட்டு டுவீட் செய்து அரசிடம் கெஞ்சுகிறார்கள். அதே சமயம் இக்கட்டான சூழ்நிலையில் சில லட்சங்களைக் கூட உதவி செய்யாமல் இருப்பதன் மர்மம் என்னவோ ?.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பாலோயர்களை பிளாக் செய்த விஷ்ணு விஷால், காரணம் என்ன ?பாலோயர்களை பிளாக் செய்த விஷ்ணு ... சிம்புவின் 45வது படம் என்ன ஆயிற்று ? சிம்புவின் 45வது படம் என்ன ஆயிற்று ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

G.Balasubramanian - namakkal,இந்தியா
30 மார், 2020 - 14:28 Report Abuse
G.Balasubramanian இது என்ன கொடுமை சார் இது. எங்கள் வரி பணம் என்ன ஆச்சு இது வரை என்ன செய்துள்ளார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in