Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறிய நடிகை

30 மார், 2020 - 12:41 IST
எழுத்தின் அளவு:
Actress-turn-as-Nurse-for-Corona-treatment

பாலிவுட்டில் காஸ்ட்யூம் டிசைனராக இருந்து நடிகை ஆனவர் ஷிகா மல்ஹோத்ரா. அன் சீன் என்ற படத்தில் அறிமுகமாகி அந்த படத்தின் பல எபிசோட்களில் நடித்தார். ரன்னிங் சாதி, லக்கி கபோதார் படங்களில் நடித்தார். கடைசியாக காஞ்சி லைப் இன் எ சிலாஹ் படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த மாதம் வெளிவந்தது.

இந்த நிலையில் காஸ்ட்டியூம் டிசைனர் ஆவதற்கு முன்பு நர்சிங் படித்திருந்த ஷிகா, சில காலம் நர்சாகவும் பணியாற்றி இருக்கிறார். தற்போது கொரோனா தாக்குதல் உச்சத்தை அடைந்திருக்கும் நேரத்தில் நடிப்பு, மாடலிங், காஸ்டியூம் டிசைன் அனைத்தையும் விட்டு விட்டு மீண்டும் நர்சாகி விட்டார்.

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சம்பளம் பெற்றுக் கொள்ளாத தன்னார்வல நர்சாக பணிக்கு சேர்ந்துள்ளார். கொரோனா நோயாளிகளுடன் இருக்கும் தனது படத்தை வெளியிட்டு "இந்த மோசமான தருணத்தில் மக்களுக்கு நர்சாக பணியாற்ற முடிவு செய்திருக்கிறேன். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்" என்று தனது டுவிட்டரில் எழுதியிருக்கிறார். ஷிகாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சமையல்!சமையல்! மகேஷ்பாபு பாடலுக்கு நடனமாடும் சல்மான் மகேஷ்பாபு பாடலுக்கு நடனமாடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

sankar - Nellai,இந்தியா
30 மார், 2020 - 21:58 Report Abuse
sankar ஆனால் - இங்கே செவிலியராக இருந்து ஓவர் நைட்டில் அரிதாரம் பூசியவர் - அரிதாரம் பெரிதென திருவாய் மலர்வது - திராவிட புதுமை
Rate this:
vijay - coimbatore,இந்தியா
30 மார், 2020 - 15:03 Report Abuse
vijay இதை பாராட்டனும். வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in