தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
பிரபல பாடகி கனிகா கபூருக்கு, நான்காவது முறையாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் பாடகி கனிகா கபூர், சன்னி லியோன் நடித்திருக்கும் பேபி டால் படப் பாடலைப் பாடியதன் மூலம் உலக அரங்கில் பிரபலமடைந்தார். கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருந்த மார்ச் 9ல், லண்டனில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பினார்.
ஆனால், அதன் பின், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. அலட்சியமாக இருந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தும் அவை மறைத்துவிட்டு, அவர் லக்னோவுக்குச் சென்றார். அங்கு, இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, மார்ச் 20ல், நடத்தப்பட்ட பரிசோதனையில் கனிகாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த 260 பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகித்து, அவர்களை, போலீஸார் கண்காணிப்பில் கொண்டு வந்தனர். கனிகாவுடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பா,ஜ., மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவும் அவரது மகனும் பா.ஜ., எம்.பி.,யுமான துஷ்யந்தும், தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, லக்னோவில் இருக்கும் சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனிகா, உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இதை கடும் குற்றச்சாட்டாவவே வைத்தது, மருத்துவமனை நிர்வாகம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில் சூழலில் அறிகுறிகள் இருந்தும் அலட்சியமாக நடந்து கொண்ட பாடகி கனிகாவின் மீது, சரோஜினி நகர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188, 269, மற்றும் 270 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நான்காவாது முறையாகவும் கனிகாவுக்கு சோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கனிகாவின் உறவினர் ஒருவர் வெளிப்படையாக இதை கண்டித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: கனிகாவின் பரிசோதனை முடிவுகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. அவர் சிகிச்சைக்குத் தகுந்த ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றே தெரிகிறது. ஏன் அவர், அப்படி செய்கிறார் என்பதும் புரியவில்லை. ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருக்கும் நேரத்தில், எங்களாளும் அவரை சென்று பார்க்கவோ, உதவி செய்யவோ முடியவில்லை. இது எல்லாவற்றையும் மீறி, அவர் உடல் நலம் தேறி வர வேண்டும். இது தான் எங்கள் பிரார்த்தனை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.