படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் | ஏ.ஆர் ரஹ்மானை ஆனந்த கண்ணீர் விட வைத்த மலையாள சூப்பர் சிங்கர் | ஆஸ்கர் விருது பட நாயகனிடம் ஒப்படைக்கப்பட்ட தர்மபுரி யானைக்குட்டி | ஆதிபுருஷ் மீதான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | டுவிட்டர் சாட்டிங்கில் வந்தியத்தேவனும், குந்தவையும்… | ஒரு பாட்டுக்கு ஆடிய ஆர்யா மனைவி சாயிஷா |
சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி, தன்னுடைய கொடூரத்துக்கு பலரையும் காவு வாங்கி வருகிறது. இதையடுத்து, இந்த நோயை இந்தியாவில் கட்டுப்படுத்தும் நோக்கோடு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வீட்டிலேயே அனைவரும் முடக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும், பொதுமக்களுக்கு, கொரோனா - அது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் அரசு நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்திப் பட உலகின் பிரபல பாடகியான ஆஷா போஸ்லே, சமூகவலைதளத்தில், என்னுடைய வாழ்க்கையில் பெரியம்மை, பிளேக், காச நோய், போலியோ உள்ளிட்ட கொள்ளை நோய்களைப் பார்த்திருக்கிறேன். அதன் வீரியம் எந்தளவுக்கு இருக்கும் என்பதும் எனக்கு மிக நன்றாகவே புரியும். இருந்த போதும், தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று என்பது, பழைய கொள்ளை நோய்களையெல்லாம் விட கூடுதல் வீரியத்துடன் இருக்கிறது. அதிகமான எண்ணிக்கையில் மக்களை அது பாதிக்கும் என்றும் தெரிகிறது. எனவே, அந்தப் பாதிப்பில் இருந்து நாம் மீள வேண்டும் என்றால், கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசு எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் நாம் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அரசு உத்தவை ஏற்று எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள்; கட்டாயம் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மீண்டு வருவோம்; அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என பதிவிட்டுள்ளார்.