Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இப்படி ஒரு குரலை இனி கேட்க முடியுமா....? - பரவை முனியம்மா காலமானார்

29 மார், 2020 - 08:23 IST
எழுத்தின் அளவு:
paravai-muniyamma-passes-away

பிரபல நாட்டுப்புற கலைஞரும், பின்னணி பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா (83), இன்று( மார்ச் 29) காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் அவரது உயிர் பிரிந்தது.

மதுரையை அடுத்த பரவை என்ற ஊரில் பிறந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடகியான இவர் கிராமிய மண் கமழும் தனது நாட்டுப்புறப் பாடல்களாலும், தனது கிராமிய பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர். 2000க்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளில் பாடியிருக்கிறார். இவர் பாடிய கருப்பணசுசாமி பாடல்கள், மதுரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

விக்ரம் நடித்த தூள் படத்தில் அவரின் பாட்டியாக முக்கியமான வேடத்தில் நடித்ததோடு அதில் இடம் பெற்ற, சிங்கம் போல நடந்துவாறான் செல்ல பேராண்டி... என்ற அதிரடியான பாடலையும் பாடினார். இது அவரை இன்னும் பிரபலமாக்கியது. சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டிவி ஒன்றில் கிராமத்து சமையல் என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று பலவித ஆரோக்கியமான சமையல்களை சமைத்து மக்களுக்கு வழங்கினார்.




கிட்னி பாதிப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் ஒருக்கட்டத்தில் படுத்த படுக்கையானார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கையால், கலைமாமணி விருது பெற்ற இவருக்கு, அரசின் உதவி தொகையாக மாதம் 6,000 ரூபாய் கிடைத்தது. இத்தொகை, மருத்துவ சிகிச்சைக்கே போதாத நிலையில், மிகவும் கடினமான சூழ்நிலையில், நாட்களை கடத்தி வந்தார். சிவகார்த்திகேயன், அபிசரவணன் உள்ளிட்ட சில பிரபலங்கள் உதவினர். இந்நிலையில் இவரது உயிர் இன்று பிரிந்தது.

எத்தனையோ பாடகர்களின் குரல்களை கேட்டிருப்போம். ஏன் ஆஸ்கர் வாங்கிய பாடகர்களின் குரல்களை கூட கேட்டிருப்போம். ஆனால், எளிய கிராமத்து மக்களின் மனம் கமழும் பரவை முனியம்மாவை போன்றதொரு குரலை இனி கேட்க முடியுமா என்பது சந்தேகமே....? மண்ணை விட்டு அவர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் இந்த உலகம் உள்ள வரை ஒலித்து கொண்டே இருக்கும்.

விவேக் இரங்கல்
பரவை முனியம்மாவின் மறைவு குறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “பரவை முனியம்மா அவர்களுடன் நான் நடித்த காட்சிகள் இன்றும் ரசிக்கப்படுகின்றன.. நல்ல கிராமியக் குரல் வளம். மண் மணம் வீசிய நல் மனம்.. வருந்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


நாசர் இரங்கல்
அனைத்து நடிகர்கள் சார்பாக, நடிகர் நாசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பரவை முனியம்மாவின் மறைவு நடிகர் சமூகத்துக்கு மட்டுமன்றி, நாட்டுப்புற பாடகர்கள் சமூகத்துக்கு பெரிய இழப்பாகும். திரையுலகில் சில காலங்கள் தான் நடித்தார் என்றாலும், பார்க்கும் அனைத்து நடிகர்களிடம் நல்லாயிருக்கியா ஐயா என்று அன்புடன் விசாரிப்பார். தூள் படம் தொடங்கி 84 படங்களில் நடித்துள்ளார். அவர் வறுமையில் இருப்பது அறிந்து நடிகர் சங்கம் மூலமாகவும் நடிகர்கள் தனிப்பட்ட முறையிலும் உதவினோம். இப்போது காலமாகி இருப்பது கேட்டு வருந்துகிறோம். நாட்டுப்புற பாடல்களில் அவர் செய்த சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும். அவரது இழப்பால் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்களை குஷியாக்கிய ஆண்ட்ரியாரசிகர்களை குஷியாக்கிய ஆண்ட்ரியா அஜித், விஜய் தொடர்ந்து மவுனம்: பெப்சிக்கு உதயநிதி 10 லட்சம் நிதி அஜித், விஜய் தொடர்ந்து மவுனம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

29 மார், 2020 - 20:45 Report Abuse
ibrahim irshad கடந்த ஐந்து வருடமாக இப்படி ஒரு குரலைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தோமா
Rate this:
swami -  ( Posted via: Dinamalar Android App )
29 மார், 2020 - 17:23 Report Abuse
swami good singer
Rate this:
swami -  ( Posted via: Dinamalar Android App )
29 மார், 2020 - 17:23 Report Abuse
swami RIP
Rate this:
chander - qatar,கத்தார்
29 மார், 2020 - 14:35 Report Abuse
chander சொர்க்கத்தில் ஓய்வு எடுங்கள்
Rate this:
vijay - coimbatore,இந்தியா
29 மார், 2020 - 13:17 Report Abuse
vijay சென்று வாருங்கள் பாட்டி
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in