Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனாவுக்கு நிதி - ரூ.25 கோடியை அள்ளி தந்த ரியல் ஹீரோ அக்ஷய்

28 மார், 2020 - 18:33 IST
எழுத்தின் அளவு:
Akshay-Kumar-Donates-Rs.25-crore-fund-to-PM-regards-Corona

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தரும் விதத்தில் மக்களும் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்கிறார்கள்.

அதோடு , கொரானா பாதிப்பில் மக்களுக்கு உதவுவதற்காக பொதுமக்கள் நிதி வழங்குங்கள் என பிரதமர் மோடி கேட்டுள்ளார். மாநில முதல்வர்கள் பலரும் நிதி கேட்டுள்ளனர். பலரும் அரசுகளுக்கு நன்கொடை அளித்து வருகிறார்கள். தென்னிந்தியாவைப் பொறுத்த வரையில் தெலுங்குத் திரையுலகத்தினர் தான் தொடர்ந்து கோடிக்கணக்கில் உதவிகளை அறிவித்து வருகிறார்கள். பிரபாஸ் ரூ.4 கோடி, பவன் கல்யாண் ரூ.2.கோடி, மகேஷ் பாபு ரூ.1 கோடி, அல்லு அர்ஜூன் ரூ.1.25 கோடி என மத்திய மாநில அரசுகளுக்கு நிதியை அள்ளி வழங்கி வருகிறார்கள். தமிழகத்தை பொறுத்தமட்டில் இங்குள்ள பெப்சி தொழிலாளர்களுக்கு தான் திரையுலகினர் நிதி உதவி அளித்தனர்.

இந்நிலையில் சினிமாவில் மட்டுமல்ல, தான் நிஜத்திலும் ஹீரோ என்பதை நிரூபித்திருக்கிறார் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார். கொரோனா தடுப்புக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வாரி வழங்கி உள்ளார்.

இதுகுறித்து அக்ஷய் டுவிட்டரில், ''இந்த நேரத்தில் மக்களின் உயிர் தான் முக்கியம். அதற்காக நாம் முடிந்த அனைத்தையம் செய்ய வேண்டும். என் சேமிப்பில் இருந்து 25 கோடி ருபாய் நான் தருகிறேன். உயிர்களை காப்பாற்றுவோம்" என பதிவிட்டுள்ளார்.

அக்ஷய் குமாரின் தாராள குணத்தை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
இப்போதைக்கு உயிர் தான் முக்கியம்: தமன்னாஇப்போதைக்கு உயிர் தான் முக்கியம்: ... ரசிகர்களை குஷியாக்கிய ஆண்ட்ரியா ரசிகர்களை குஷியாக்கிய ஆண்ட்ரியா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

Tamil - Trichy,இந்தியா
29 மார், 2020 - 14:17 Report Abuse
Tamil இவர் பாராட்டப்பட வேண்டியவர்தான். அதில் மாற்று கருத்து இல்லை . அதே சாமத்தில் இவரின் சென்ற ஆண்டின் வருமானம் மட்டும் 800 கோடிகள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். தனது 3% வருமானத்தை கொடுத்திருக்கிறார். இதே போல் எல்லோரிடமிருந்தும் 3% வருமானத்தை தானாக முன் வந்து கொடுத்தால் அரசுக்கு பேருதவியாக இருக்கும். சும்மா கமல், ரஜினி, சுடலைனு சொல்லாம நீங்களும் (மக்களும்) தன்னுடைய பங்காக என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். நாட்டு மக்களை காப்பற்றுவதில் எல்லோரும் வொன்று சேருவோம். கொரனவை வெல்வோம்.
Rate this:
Tamil - Trichy,இந்தியா
29 மார், 2020 - 14:01 Report Abuse
Tamil ரஜினி, கமல் எவ்ளவு கொடுத்தார் என்று இப்படி கருத்து போடும் நண்பர்களே கொஞ்சம் இந்த கோடி கோடியாய் கமிஷன் அடிக்கும் அரசியல் வாதிகள், அமைச்சரகள்,அல்லக்கைகள் மற்றும் அதிகாரிகளையும் கொஞ்சம் கவனியுங்கள்.
Rate this:
balaji - ibri,ஓமன்
29 மார், 2020 - 12:13 Report Abuse
balaji உண்மையான மனிதர் நல்லுள்ளம் படைத்தவர், நமது தமிழ் ஹீரோக்கள் இன்னும் எதுவும் செய்யவில்லை, எதுவும் நன்கொடை கொடுத்த மாதிரி செய்தி வரவில்லை, இந்த சமயங்களில் அவர்கள் பண உதவி மக்களுக்கு நன்மை பயக்கும் புரிந்து செய்தல் நல்லது.
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
29 மார், 2020 - 11:14 Report Abuse
shoba NEJA AAMBALA HERO
Rate this:
M.P.Murugaiah - chennai,இந்தியா
29 மார், 2020 - 08:57 Report Abuse
M.P.Murugaiah வாழ்த்துக்கள் கடவுள் என்றும் ஆசீர்வதிப்பார் உங்கள் பரம்பரை வாழ
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in