Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பூமி உங்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது - நிவேதா பெத்துராஜ்

28 மார், 2020 - 12:14 IST
எழுத்தின் அளவு:
The-earth-give-you-to-take-rest-says-Nivetha-Pethuraj

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் அது அதிகமாகப் பரவுகிறது. இந்தியாவில் கட்டுக்குள் வைக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 21 நாள் ஊரடங்கால் மக்கள் வெளியில் நடமாடாமல் இருக்கிறார்கள்.

யாரும் வீட்டை விட்டு வெளிவரக் கூடாது என பல பிரபலங்கள் வீடியோக்களையும், சமூக வலைத்தளங்களில் பதிவுகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், “நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இதில் ஒன்றாக இருப்போம். உங்களையும், உங்கள் அன்பானவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டே இருந்திருப்பீர்கள். இந்த பூமி உங்களுக்கு ஒரு ஓய்வைக் கொடுத்திருக்கிறது. இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மீது அதிக அன்பைக் காட்டுங்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்,” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சைதனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: ... தோட்டத்தை சுத்தம் செய்யும் ஷில்பா ஷெட்டி தோட்டத்தை சுத்தம் செய்யும் ஷில்பா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nAmE -  ( Posted via: Dinamalar Android App )
28 மார், 2020 - 16:22 Report Abuse
nAmE u beauty
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in