Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை

28 மார், 2020 - 11:59 IST
எழுத்தின் அளவு:
Corona-notice-sticked-in-Kamal-house-then-removed-after-wrong-information

சென்னை : கொரோனா வைரசில் இருந்து எங்களை காக்க தனிமைப்படுத்தி கொண்டோம் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, அந்த நோட்டீசை அகற்றிய சென்னை மாநகராட்சி, இந்த விவகாரத்தில் தவறு நடந்து விட்டதாக தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வீட்டில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல் வீட்டிலும் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில், கொரோனாவில் இருந்து எங்களையும் சென்னையையும் காக்க நாங்கள் வீட்டிற்குள் தனிமைபடுத்தி கொண்டுள்ளோம் என்ற வாசகத்துடன் 10.3.2020 முதல் 06.04.2020 வரை தனிமைப்படுத்தி கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முகவரியில் கமல் பெயர் மற்றும் வீட்டு முகவரி இடம் பெற்றிருந்தது. ஆனால், எத்தனை பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமலுக்கு தெரியாமலேயே அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக மக்கள் நீதி மையம் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நோட்டீஸ் அகற்றப்பட்டது.




இது தொடர்பாக விளக்கமளித்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள், கமல் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்ற வந்ததால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பாஸ்போர்ட் முகவரியை கொண்டு கமல்ஹாசனின் பழைய முகவரியில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கமல் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் கொரோனா நோட்டீஸ் அகற்றப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறுகையில், கமல் வீட்டில் சிறிய தவறு நடந்துவிட்டது. இனிமேல், இதுபோன்ற நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

கமல் விளக்கம்
இது தொடர்பாக கமல் வெளியிட்ட அறிக்கை: உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது வீட்டின் வெளியே ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுள்ளேன். அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது - காஜல் அகர்வால்குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் ... பூமி உங்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது - நிவேதா பெத்துராஜ் பூமி உங்களுக்கு ஓய்வு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

vira - tamil naadu,இந்தியா
29 மார், 2020 - 12:59 Report Abuse
vira இது குறித்து மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்த போது நடிகை கவுதமி சமீபத்தில் வெளிநாடு சென்று தமிழகம் திரும்பியுள்ளார். அதனால் அவரது இல்லம் தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக நோட்டீஸ் ஒட்டப்பட வேண்டும் என்பதால் அவரது பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை வைத்து மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. ஆனால், கவுதமி பாஸ்போர்ட்டில், கமலஹாசனின் கட்சி அலுவலகம் முகவரி இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
Rate this:
29 மார், 2020 - 09:02 Report Abuse
Common man எய்ட்ஸ் என்பதை தவறுதலாக கொரோனா என்று ஒட்டி விட்டார்களோ!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in