Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.1 கோடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்

28 மார், 2020 - 11:30 IST
எழுத்தின் அளவு:
SP-Production-house-donate-Rs.1-crore

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவர்களுக்கு ஆதரவு தரும் விதத்தில் மக்களும் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்கிறார்கள். அதோடு பலரும் அரசுகளுக்கு நன்கொடை அளித்து வருகிறார்கள்.

தென்னிந்தியாவைப் பொறுத்த வரையில் தெலுங்குத் திரையுலகத்தினர் தான் தொடர்ந்து கோடிக்கணக்கில் உதவிகளை அறிவித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர்கள் கோடிகளிலும், லட்சங்களிலும் உதவிகளை அளித்து வரும் நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்று சினிமா தொழிலாளர்களுக்காகவும், சுகாதாரப் பணியாளர்களுக்காகவும் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

தமிழில் 'வசந்த மாளிகை' உள்ளிட்ட படங்களையும், தெலுங்கில் பல படங்களையும் தயாரித்த சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் 1 கோடி ரூபாய் தருவதாக அறிவித்துள்ளது. மறைந்த ராமாநாயுடு சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை நிறுவியவர். அவருடைய மகன்தான் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், பேரன் ராணா டகுபட்டி.

தமிழில் கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் கூட இன்னும் எந்த நன்கொடையும் தர முன்வரவில்லை. தயாரிப்பு நிறுவனங்களும் பெரிதாக அளிக்கவில்லை. ஆனால், தெலுங்கு திரையுலகத்தினர் தொடர்ந்து அளித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'டைம் பாஸ்!''டைம் பாஸ்!' குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது - காஜல் அகர்வால் குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
31 மார், 2020 - 06:33 Report Abuse
 nicolethomson நடிகர் அஜித்தின் தக்ச நிறுவனம் அவர்களின் ட்ரான் டெக்னலாஜி பயன்படுத்தி வருகின்றனர் அதை பற்றியும் செய்திகள் போடுங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in