லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். பத்திரிகையாளராகவும் இருந்தவர். குக்கூ படத்தை அடுத்து, இவர் ஜோக்கர் என்கிற படத்தை இயக்கினார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் ஜிப்ஸி படம் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இருந்தாலும், அதில் இடம் பெற்று இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன.
இந்நிலையில் இயக்குநர் ராஜுமுருகன் - ஹேமா சின்ஹா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஹேமா சின்ஹா ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார்.