Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனாவுக்கு 4 கோடி நிதி: நிஜ ஹீரோவான பிரபாஸ்

27 மார், 2020 - 10:19 IST
எழுத்தின் அளவு:
Corona-relief-Fund---Prabhas-donates-Rs.4-crore

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் தற்போது 21 நாள் மக்கள் ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க திரைப்பட நடிகர், நடிகைகள் தாராமாக நிதி வழங்கி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தெலுங்கு நடிகர்கள் வாரி வாரி வழங்குகிறார்கள்.

பவன் கல்யாண் ரூ.2 கோடி, மகேஷ் பாபு, சிரஞ்சீவி ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளனர். ராம் சரண் 70 லட்ச ரூபாயும், நிதின் 20 லட்சம் ரூபாயும், வருண் தேஜ் 10 லட்ச ரூபாயும் வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில் பாகுபலி ஹீரோ பிரபாஸ் ரூ.4 கோடி ரூபாய் வழங்கி நிஜ ஹீரோ ஆகியிருக்கிறார். பிரதமர் நிவாரண நிதிக்கு 3 கோடியும், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும் வழங்கி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
ரொம்ப பயங்கரமா இருக்கு, வௌியே வராதீங்க - வடிவேலு கண்ணீர்ரொம்ப பயங்கரமா இருக்கு, வௌியே ... நோ ஸ்வீட்ஸ் -  ஒன்லி இளையராஜா: மரகதமணி நோ ஸ்வீட்ஸ் - ஒன்லி இளையராஜா: மரகதமணி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

SUNDAR - chennai,இந்தியா
31 மார், 2020 - 09:28 Report Abuse
SUNDAR நான் கருது தெரிவித்தது நம் தமிழ் நாடு நடிகர்களை. அவர்கள் அடுத்த ஸ்டேட் நடிகர்களிடம் நிறைய பாடம் கற்று கொள்ள வேண்டும்.
Rate this:
SUNDAR - chennai,இந்தியா
31 மார், 2020 - 09:26 Report Abuse
SUNDAR நம் நடிகர்களுக்கு ஒன்றும் நாடு பற்று கிடையாது. எல்லாம் ஈவேரா கூட்டம் . எப்படி நாட்டு பற்று வரும்.? இதை பார்க்கும் நம் மக்களுக்காவது ஒரு தெளிவு உண்டா என்றால் அதுவும் கிடையாது. இந்த கூத்தாடிகளின் பின் பொய் கொண்டு இருக்கிறோம் இவர்கள் தான் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது செய்வார்கள் என்று இன்னமும் நம்பிக்கொண்டு நாட்களை வீண் அடித்துக்கொண்டு இருக்கிறோம். நமக்கு நாம் தான் வெற்றிக்கு வழி தேடிக்கொள்ள வேண்டும். இந்த கூத்தாடிகள் இல்லை.
Rate this:
s t rajan - chennai,இந்தியா
28 மார், 2020 - 19:31 Report Abuse
s t rajan கோடி கோடிகள் நம் நடிகர்களும் தான் சம்பாதிக்கிறாங்க....ஆனா இந்தியாவின் நம் 1 ஆம் ரஜினியே 50 லட்சம் தான். அவருடைய வில்லன் அக்ஷய்குமார் 25 கோடி. No more comments.
Rate this:
kalyanasundaram - ottawa,கனடா
28 மார், 2020 - 16:15 Report Abuse
kalyanasundaram வாட் அபௌட் TAMIL NADUS HEROS
Rate this:
27 மார், 2020 - 13:34 Report Abuse
chandran, pudhucherry பாகுபலிடா... நன்றி. பெருமிதம் கொள்கிறேன் உங்களை நினைத்து
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in