Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரொம்ப பயங்கரமா இருக்கு, வௌியே வராதீங்க - வடிவேலு கண்ணீர்

27 மார், 2020 - 10:04 IST
எழுத்தின் அளவு:
Please-dont-come-outside---Vadivelu-tears

இந்தியாவையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையை தவிர மற்ற நேரங்களில் மக்கள் வீட்டை வௌியே வரவேண்டாம். ஊரடங்கை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் சிலர் இதை மீறி செயல்படுகின்றனர். அரசு, அதிகாரிகள், திரைப்பிரபலங்கள் பலரும் இதுப்பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மக்களை இப்போதும் சிரிக்க வைத்து கொண்டிருக்கும் நடிகர் வடிவேலு கண்கலங்கி ஒரு வீடியோ வௌியிட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மன வேதனை உடனும், துக்கத்துடனும் சொல்கிறேன். அரசு சொல்லும் அறிவுரை படி கொஞ்ச நாளைக்கு வீட்டுக்கு உள்ளேயே இருங்க. மருத்துவ உலகம் மிரண்டு போய் உள்ளது. அவர்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்ற போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

வௌியே வராதீங்க என்று போலீசார் கெஞ்சி கும்புடுகிறார்கள். யாருக்காக இல்லாவிட்டாலும், நம்ம சந்ததியினருக்காக, நம்ம புள்ள, குட்டிகளின் உயிரை காப்பாற்ற நாம் எல்லோரும் வீட்டில் இருக்கணும் என கேட்டுக் கொள்கிறேன். இதை அசால்ட்டா எடுக்காதீங்க. ரொம்ப பயங்கரமா இருக்கு. தயவு பண்ணி வெளியே வராதீங்க" என கண்கலங்கி வீடியோவில் பேசியுள்ளார் நடிகர் வடிவேலு.



Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா விழிப்புணர்வுகொரோனா விழிப்புணர்வு கொரோனாவுக்கு 4 கோடி நிதி: நிஜ ஹீரோவான பிரபாஸ் கொரோனாவுக்கு 4 கோடி நிதி: நிஜ ஹீரோவான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

V Gopalan - Bangalore ,இந்தியா
27 மார், 2020 - 17:14 Report Abuse
V Gopalan Advice is OK how about his contribution to Chief Minister's or Prime Minister's relief fund. Let him contribute for the Nation.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
27 மார், 2020 - 13:52 Report Abuse
 Muruga Vel பட வாய்ப்புகள் இல்லாம வீட்டிலே முடங்கி கிடந்து பழக்கமா போச்சு ..இப்போ எல்லாரும் வீட்டில இருக்கறது ஆறுதல் போல இருக்கு ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in