Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா பாதிப்பு - ஆடம்பரமின்றி திருமணம்: மணிகண்டன் ஆச்சாரி

26 மார், 2020 - 20:04 IST
எழுத்தின் அளவு:
Corona-effect---Manikandan-Aachary-wedding-will-be-simple

ரஜினி நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட திரைப்படத்தில் நடித்தவர் நடிகர் மணிகண்டன் ஆச்சாரி. இவர் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பதோடு, சமீபத்தில் வெளிவந்த கம்மாட்டி பாடம் என்ற மலையாள படத்தில் இவர் சிறப்பாக நடித்திருந்தார். இதற்காக, மாநில விருதும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், மணிகண்டன் ஆச்சாரிக்கும், அஞ்சலி என்ற பெண்ணுக்கும், வரும் ஏப்ரல் 26ல் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை மணிகண்டன் செய்து கொண்டிருந்தார். திரையுலக பிரபலங்களை அழைத்து, திருமணத்தை நடத்த மணிகண்டன் முடிவு செய்திருந்தார். தற்போது உள்ள சூழ்நிலையில் அது முடியாது என்பதால், தன்னுடைய திருமண ஏற்பாட்டில் மாற்றங்களை செய்திருக்கிறார் மணிகண்டன்.

இது குறித்து, மணிகண்டன் ஆச்சாரி கூறியிருப்பதாவது: ஏப்ரல் 26ல், திட்டமிட்டபடி திருமணம் நடக்கும். ஆனால், இந்த திருமணம், ஆடம்பரமின்றி இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் மிக எளிமையாக நடத்த முடிவு செய்திருக்கிறோம். தற்போது இருக்கும் சூழலில், தனக்கு இருக்கும் சமூக பொறுப்பு காரணமாக, திருமண விழாவில் கூட்டம் கூட்ட விரும்பவில்லை. திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்து இருக்கிறோம். இதற்கு, மணமகள் வீட்டாரும் ஒப்புக் கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

மணிகண்டனின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பயிற்சி வீடியோவை வெளியிட்டு அருண் விஜய் அறிவுரை!பயிற்சி வீடியோவை வெளியிட்டு அருண் ... அடுத்தக்கட்டத்திற்கு முன்னேற வேண்டிய நேரம் இது - கமல் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in