Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பயிற்சி வீடியோவை வெளியிட்டு அருண் விஜய் அறிவுரை!

26 மார், 2020 - 19:54 IST
எழுத்தின் அளவு:
Arun-Vijay-advice-with-video

அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து முடித்திருக்கும் நடிகர் அருண் விஜய், கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் பார்கவுர் என்ற சண்டைப் பயிற்சியை வீட்டிலிருந்த படியே தான் மேற்கொள்ளும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவை வெளியிட்டு அவர் பதிவிட்டிருப்பதாவது: உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை நாம் எல்லோரும் சேர்ந்துதான் வீழ்த்தியாக வேண்டும். அதற்காகத்தான், இந்திய அரசு இருபத்தியோரு நாட்களுக்கு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொண்டு, கடுமையான ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறது. இது எல்லாமே நம்முடைய நன்மைக்காகத்தான். அதனால், எல்லோரும் வீட்டிலேயே இருந்து, அரசின் உத்தரவுக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்.

வீட்டிலிருப்பது கொஞ்சம் கஷ்டமான ஒன்று தான். இருந்தாலும், இருந்துதான் ஆக வேண்டும். வீட்டில் இருக்கும்போது, சோம்பேறித்தனமாக இருக்க வேண்டாம். உடலுக்கு நல்ல பயிற்சியைக் கொடுங்கள். இந்த கால கட்டத்தை அதற்கு பயன்படுத்துங்கள். இதற்காக, நான் மேற்கொள்ளும் சண்டைக் காட்சி பயிற்சி ஒன்று குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறேன். எல்லோரும் அதை செய்ய வேண்டியதில்லை. அதைப் போல, யார் யாருக்கு எந்த உடல் பயிற்சி ஏற்றதோ, அதை வீட்டிலேயே செய்யுங்கள். தேவையானால், நீங்கள் விரும்புவோருக்கும் இந்தத் தகவலை அனுப்பி வையுங்கள். இது எல்லோருக்கும் நன்மை பயக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குடும்பமே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்: ஸ்ருதிஹாசன்குடும்பமே தனிமைப்படுத்திக் ... கொரோனா பாதிப்பு - ஆடம்பரமின்றி திருமணம்: மணிகண்டன் ஆச்சாரி கொரோனா பாதிப்பு - ஆடம்பரமின்றி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in