Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடும்பமே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்: ஸ்ருதிஹாசன்

26 மார், 2020 - 19:47 IST
எழுத்தின் அளவு:
Shrutihaasan-total-family-quarantine

ஒட்டுமொத்த குடும்பத்தினரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க நோய்த் தொற்று உள்ளவர்களும், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன், லண்டன் சென்று வந்த நடிகை ஸ்ருதி ஹாசன், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதேபோல், அவருடைய தாயார் சரிகா, மும்பையில் உள்ள வீட்டிலும், தந்தை கமல், சகோதரி அக்ஷரா ஹாசன் ஆகியோர், சென்னையில் தனித் தனி வீட்டிலும், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அனைவரும் தாங்கள், ஏற்கனவே மேற்கொண்ட பயணங்களின் அடிப்படையில், இம்முடிவை எடுத்திருப்பதாகவும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது: இது கடினமாகத்தான் இருக்கும். இருந்தாலும் மக்கள் இதை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். தன்னுடன் உதவியாளர்கள் யாரும் இல்லை. நான் வளர்க்கும் பூனை கிளாரா மட்டுமே என்னுடன் இருக்கிறது. இதைத் தவிர, இப்போதைக்கு வேறு வழியில்லை என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றி மாறன் படத்தில் ஆண்ட்ரியா!வெற்றி மாறன் படத்தில் ஆண்ட்ரியா! பயிற்சி வீடியோவை வெளியிட்டு அருண் விஜய் அறிவுரை! பயிற்சி வீடியோவை வெளியிட்டு அருண் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in