Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படம் இல்லேன்னாலும் பொரி - கடலை விற்பேன் - 'அங்காடித்தெரு' மகேஷ்

26 மார், 2020 - 18:45 IST
எழுத்தின் அளவு:
Angaditheru-Mahesh-about-cinema-future

வசந்த பாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வௌியாகி விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்ற படம் 'அங்காடித்தெரு'. இது வௌியாகிய 10ம் ஆண்டு களை கடந்த நிலையில் மகேஷ் அளித்த பேட்டி, சினிமாவே என்னவென்று தெரியாமல் வந்தேன். அந்தப்படம் எனக்கு பெயரை பெற்று தந்தது. அதை தக்க வைக்க இந்த 10 ஆண்டுகளாக ஓடிக் கொண்டு இருக்கிறேன். சரியான கதையை தேர்வு செய்யவில்லை, நான் நடித்த படங்கள் உரிய நேரத்தில் வௌியாகவில்லை.

என் சொந்த ஊர் திண்டுக்கல். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் எங்கள் சொந்த தொழிலான பொரி, கடலை விற்கும் வேலையை பார்ப்பேன். சம்பந்தம் இல்லாத துறையில் நான் வந்ததால் யாரிடமும் எப்படி போய் வாய்ப்பு பெறுவது என்பது கூட எனக்கு தெரியாது. நான் உடல் எடை அதிகரித்து விட்டதாக கூறுகிறார்கள். இது தான் எனது சராசரி எடை. நான் ஒரு விளையாட்டு வீரன், அதனால் உடலை சரியாக பராமரித்து வருகிறேன். அங்காடித்தெரு படத்திற்காக 18கிலோ எடை குறைத்தேன். அந்தப்படத்தை பார்த்துவிட்டு இப்படி கூறுகிறார்கள். வீராபுரம் ரிலீஸ் ஆக வேண்டி உள்ளது. அடுத்து தேனாம்பேட்டை மகேஷ் என்ற ஒரு படத்தில் நடிக்கிறேன். அதுவும் கொரோனால் படப்பிடிப்பு தள்ளி போய் உள்ளது. அங்காடித்தெரு மாதிரியான ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கேலி செய்த நெட்டிசனுக்கு நெத்தியடி பதில் கொடுத்த மஞ்சிமா மோகன்கேலி செய்த நெட்டிசனுக்கு நெத்தியடி ... 'ஆர்ஆர்ஆர்' - மோஷன் போஸ்டர் வரவேற்பு எப்படி ? 'ஆர்ஆர்ஆர்' - மோஷன் போஸ்டர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28 மார், 2020 - 23:07 Report Abuse
Ramesh R தமிழன் நீ உயர வேண்டும்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
28 மார், 2020 - 03:48 Report Abuse
meenakshisundaram நான் அடிக்கடி Mahesh பற்றி நினைப்பதுண்டு ,அங்காடி தெருவுக்கேற்ற நாயகன் ,ஆனால் திரை உலகம் எவ்வளவு கொடியது ?அஞ்சலியை அலேக்காக தூக்கிவிட்டது ,ஆனால் இவரை?
Rate this:
Sankar - Chennai,இந்தியா
27 மார், 2020 - 19:58 Report Abuse
Sankar மகேஷ்...நான் உங்களை பற்றி நினைத்தது உண்டு. வெற்றி உங்கள் மிக அருகில் உள்ளது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in