விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் | கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை | மலையாளத்தில் இன்று ஒரே நாளில் 2 போலீஸ் படங்கள் ரிலீஸ் | ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி' |
கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தினால் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டில் இருப்பதன் அவசியம் குறித்து நடிகை, நடிகைகள் பலர் சமூக வலைதளங்களின் வாயிலாக அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
நடிகை மஞ்சிமா மோகனும் தன் பங்குக்கு அறிவுரை வழங்கி டுவீட் செய்தார். அப்போது நெட்டிசன் ஒருவர், மஞ்சிமாவின் உருவத்தை கேலி செய்யும் வகையில் கமெண்ட் செய்தார். அதற்கு பதில் அளித்த மஞ்சிமா, "இதுபோன்ற மக்களும் நம்முடன் தான் இருக்கிறார்கள். வழக்கமாக இதுபோன்ற கமெண்ட்களுக்கு நான் பதில் அளிப்பது இல்லை. மக்களை வீட்டில் இருக்க சொன்னதற்கு, எனக்கு கிடைத்த பலன் இதுதான். வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பது எளிதானது என நீங்கள் நினைப்பது தவறு சகோதரா. நமக்கு வானத்தில் இருந்து பணம் கொட்டாது", என அவர் தெரிவித்துள்ளார்.