விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் | கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை | மலையாளத்தில் இன்று ஒரே நாளில் 2 போலீஸ் படங்கள் ரிலீஸ் | ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி' |
நடிகை பிக்பாஸ் சாக்ஷி இன்ஸ்டா லைவ்வில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தனது வீட்டின் புத்தக அறையை ரசிகர்களுக்கு காட்டினார். அந்த அறையில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வியந்து போய்விட்டனர்.
மேலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் 21 நாட்களும் தான் தினமும் லைவ் சேட்டில் வந்து ரசிகர்களுக்கு போட்டி வைக்க உள்ளதாக சாக்ஷி கூறினார். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தனது புத்தக அறையில் உள்ள புத்தகங்களை பரிசாக அளிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, சாக்ஷியை பலரும் திட்டி தீர்த்தனர். அவரது அரைக்குறை ஆடைகள் விமர்சனத்துக்கு உள்ளாகின. எனவே புத்தக வாசிப்பின் மீது சாக்ஷிக்கு இருக்கும் ஆர்வம் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழக பட்டதாரியான சாக்ஷி, படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியவர் என்பது பலரும் அறியாத விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.