Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விலங்குகளை அடைத்து வைக்கக் கூடாது: நமீதா

26 மார், 2020 - 16:19 IST
எழுத்தின் அளவு:
Namitha-about-animals

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீட்டில் இருப்பதையும்; விலங்குகளை உயிரியல் பூங்காக்களில் அடைப்பதையும் ஒப்பிட்டு நடிகை நமீதா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், அவர் கூறியிருப்பதாவது:

நான், ஒருபோதும் உயிரியல் பூங்காக்களை ஆதரித்தது கிடையாது. அங்கே செல்வதற்கும் யாரையும் ஊக்குவித்தது கிடையாது. சில நாட்கள் வீட்டில் இருப்பதற்கே நமக்குத் தொய்வாகவும், வெளியே செல்ல ஆசையாகவும் இருக்கிறது. நமது மகிழ்ச்சிக்காக விலங்குகளை அடைத்து வைக்கும்போது அவற்றுக்கும் இப்படித்தானே இருக்கும்?
உங்கள் குழந்தைகளுக்கு விலங்குகளைக் காட்ட விரும்பினால், உங்கள் கணினியிலோ அல்லது சரணாலயத்துக்கு அழைத்துச் சென்றோ காட்டுங்கள். ஆனால், தயவு செய்து அவற்றை அடைத்து வைப்பதை நிறுத்துங்கள். மன அழுத்தம் மற்றும் சோகத்தால் அவை இறக்கின்றன. நினைவிருக்கட்டும். நாம் அங்கே சென்று டிக்கெட் வாங்குவதால்தான், உயிரியல் பூங்காக்கள் நிரம்பி வழிகின்றன.

நாம் அங்கு செல்வதை நிறுத்தி விட்டால், காட்டுக்குச் சொந்தமான இயற்கையின் படைப்புகளை அடைத்துவைப்பதை, அவர்கள் நிறுத்தி விடுவார்கள். கடைசியாக ஒன்று சொல்லிக்கொள்கிறேன், விலங்குகள் நம்மோடு வாழ்பவைதான். ஆனால் நமக்காக வாழ்பவை அல்ல என்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இரு தாதாக்களின் அதிரடி ஆட்டமே குருதி ஆட்டம்: ஸ்ரீ கணேஷ்இரு தாதாக்களின் அதிரடி ஆட்டமே ... 21 நாளும் ரசிகர்களுக்கு வித்தியாசமான டாஸ்க் கொடுத்த சாக்ஷி 21 நாளும் ரசிகர்களுக்கு வித்தியாசமான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கூண்டு கடை அதிபர் சரி சொன்னீங்க மேடம்
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
26 மார், 2020 - 17:19 Report Abuse
Endrum Indian அப்போ வீட்டில் செல்லப்பிராணி என்று சொல்லி அதை கட்டிப்போட்டு அல்லது வீட்டுக்குளேயே வைத்திருந்து கொடுமை படுத்துவது சரியா??அதை முதலில் ஒழிக்கவேண்டும். மிருகம் சுதந்திரமாக வாழ் வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in