Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வீட்டைவிட்டு வெளியில் வருவது கொலை குற்றத்திற்கு சமம்: அர்ஜுன்

26 மார், 2020 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Arjun-awareness-video-of-21-days-curfew

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் 21நாள் மக்கள் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து நடிகர் நடிகைகள், விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

நாம் இப்போது சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் மக்கள் அரசு சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். இந்த கொடூர வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க நீங்கள் பணம் காசு செலவு செய்ய வேண்டாம். வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால் போதும்.

நமது நாடு நமக்கு பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் தந்திருக்கிறது. ஆனால் இன்னொருவரை கொலை செய்யும் சுதந்திரம் தரவில்லை. நீங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்தால் உங்களிடம் கொரோனா வைரஸ் இருக்கும்பட்சத்தில் நீங்கள் பல நூறு பேரை கொலை செய்ய செல்கிறீர்கள் என்று பொருள். வெளியில் செல்லும்போது இன்னொருவர் மூலம் உங்களுக்கு பரவினால் வீட்டுக்கு வந்த உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்ய போகிறீர்கள் என்று பொருள். எப்படி இருந்தாலும் அது கொலை குற்றம்தான். கொரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்காவிட்டால் நம்மை நாமே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்வதற்கு சமம்.

தமிழ் நாட்டு மக்களில் 90 சதவிகிதம் மக்கள் சினிமா ரசிர்கள்தான். ரஜினி, கமல், விஜய், அஜீத் இப்படி யாரோ ஒருவரின் ரசிகர்கள் அவர்கள் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை தடுக்க வேண்டும். அதாவது மொத்தமாக கூடி நின்று தடுக்க வேண்டும் என்பதில்லை. தங்கள் கையில் உள்ள பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் மூலம் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு இதன் தீவிரத்தை எடுத்துச் சொல்லி தடுக்க வேண்டும்.

இவ்வாறு அர்ஜுன் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இந்துக்களின் ஒரே நாடு இந்தியா: டி.வி.நிகழ்ச்சியில் ரஜினி கருத்துஇந்துக்களின் ஒரே நாடு இந்தியா: ... அப்பாவைத் தொடர்ந்து டுவிட்டருக்கு வந்த ராம்சரண், 70 லட்சம் உதவி அப்பாவைத் தொடர்ந்து டுவிட்டருக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27 மார், 2020 - 17:03 Report Abuse
skv srinivasankrishnaveni ilasukalethaan rombave veriyaa nadakkuthungka nee enna solradhunaangennaadhukkukekkanum enru thimiruthaan munjile irukku நடுத்தெருவில் தோப்புக்கரணம் உருளுசேவை எல்லாம் எவ்ளோ அசிங்கமா இருக்குங்க பார்த்தால்படிச்சபிள்ளைகளாட்டமாயிருக்குங்க பசங்களா இது உங்களுக்கு ஜாலியா ஊர் சுத்தகிடைச்ச விடுமுறை இல்லே நீங்கள்போலிசுகிட்ட அவமானம் படுவதைப்பார்க்கும் உங்க பெற்றோர் உறவுகளுக்கு எவ்ளோ அவமானம் என்றுபுரியுமா கேவலமா இல்லியா அப்படி என்னாதுக்கு பைக்லே இருன்னு பார்க்கணும் மாட்டின்னு அசிங்கம் பாடணும் வீட்டுக்குஉபயோகமா காய் பால்வாங்கினாள் புண்ணியமாப்போவுமே , என்னிக்கு இவனெல்லாம் பெற்றவளுக்கு உதவி செய்யுறீங்க யோசிக்கவும் வசதி உள்ளவனும் செயறதே இல்லே இல்லாதவனாயும்கண்டுக்கறதே இல்லே அவா துட்டு மட்டுமேதான் குறி பாசம் நெஞ்சிலே இல்லீங்க பாதரூம் லேயும் குலை அடியிலேயும் தான் இருக்குவலுக்கிவிழுந்தாலும் அம்மாவை கத்துவானுக எம்மா பாசம்போக கழுவலேன்னு
Rate this:
s t rajan - chennai,இந்தியா
26 மார், 2020 - 14:43 Report Abuse
s t rajan நெற்றி யடி அரசு செயல்படுத்துமா? இப்போதும் ஸ்கூட்டரில் 3 பேராக வலம் வருகிறார்கள்.... இவர்களை சிறையில் அடைத்து வேண்டியதும் பறிமுதல் செய்து ஏலத்திற்கு விட்டுஅத்தொகையை நிவாரணத்திற்கு உபயோகிக்கதாமே?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in