Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்துக்களின் ஒரே நாடு இந்தியா: டி.வி.நிகழ்ச்சியில் ரஜினி கருத்து

26 மார், 2020 - 12:16 IST
எழுத்தின் அளவு:
What-Rajini-says-about-indian-culture-in-Bear-grylls-program

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர்ல் கிரிஸ் உடன் இன் டு தி வைல்ட் என்ற நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இருவரும் அடர்ந்த காட்டின் வழியா சாகச பயணம் மேற்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஒளிபரப்பானது. இந்த பயணத்தில் பியர்ல் கிரிஸ் ரஜினியிடம் பல கேள்விகள் கேட்டார். அதற்கு ரஜினி அளித்த பதில்களின் சுருக்கம் வருமாறு:

எனது ஆசை என்னவென்றால்...இந்தியாவில் ஏழ்மையைப் போக்க வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க வேண்டும். இந்தியா கலாச்சார ரீதியாக, மத ரீதியாக மிகவும் வளமான நாடு. பொருளாதார ரீதியாகவும் வளமான நாடாக மாற வேண்டும். அதுதான் என் கனவு.

இந்த நாட்டில் நான்கு முக்கிய மதங்கள் இருக்கின்றன. இஸ்லாம், கிறிஸ்துவம், பவுத்தம், இந்து. இவற்றில் இஸ்லாம், பவுத்தம், கிறிஸ்துவத்துக்கென நிறைய நாடுகள் உள்ளன. ஆனால் இந்துக்களுக்கு ஒரு நாடுதான் உள்ளது. அதுதான் இந்தியா. நேபாளம் என்ற சிறிய ராஜ்ஜியம் இருக்கிறது. ஆனால் அதையும் மீறி நாம் இங்கு வாழ்கிறோம்.

எல்லா மதங்களையும் ஏற்றுக்கொண்டு வாழ்கிறோம். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் நாடு இந்தியா மட்டுமே. இதுதான் இந்த தேசத்தின் மிகப்பெரிய நற்குணம். இந்த நாட்டின் சகிப்புத்தன்மை, இதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

பஞ்சபூதம் என்று சொல்கிறோமே, நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என இந்த பஞ்சபூதங்களையும் இந்துக்கள் இந்தியாவில் கடவுளாக வணங்குகிறார்கள். மரம், பாறைகள், நதிகள் என அனைத்தையும் கடவுளாகப் பார்க்கிறார்கள். இது ஒரு சிறந்த கலாச்சாரம்.

இவ்வாறு ரஜினி கூறினார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
துணை நடிகர்கள் வேலை இழப்பு: ஐசரி கணேஷ் 10 லட்சம் நிதிதுணை நடிகர்கள் வேலை இழப்பு: ஐசரி ... வீட்டைவிட்டு வெளியில் வருவது கொலை குற்றத்திற்கு சமம்: அர்ஜுன் வீட்டைவிட்டு வெளியில் வருவது கொலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

venkatesaperumal - sivakasi,இந்தியா
31 மார், 2020 - 10:29 Report Abuse
venkatesaperumal சத்தியத்தை கூறிய திரு ரஜினி அவர் மேலும் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை நடத்திரமாக திகழ்கிறார் , யாரையும் புண்படுத்தது வாசு குடும்பகம் , எல்லாவற்றிலும் தெய்வத்தன்மை கான்பரவர்கள் ஹிந்துக்கள் சரவம் சிவமயம்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27 மார், 2020 - 16:48 Report Abuse
skv srinivasankrishnaveni இந்த இந்தியமண்ணிலே பிறந்துட்டு என்னவோ மெக்காலே பிரண்டு மதீனாலே வளந்துபஞ்சம்பிழைக்க இந்தியவந்தாப்போல பினாத்தும் பலருக்கும் ஆங்கிலேயனை பார்த்துட்டு அவனைக்காக்கா பிடிக்கமாதமாறிய பல கூமுட்டைகளின் வாரிசுகளெதான் பல கிறிஸ்துவா மறுக்கமுடியுமா இப்போதும் மிஷனரி தருமபிச்சைக்காசுக்கு மதம் மாறும் ஏவாளும் கிறிஸ்தவ மதமும் தெரியாது பைபிளும் படிக்க வோ புரிஞ்சுண்டுநடக்கவோ முடியாது திகவி பெரியாரிடம் என்று சொல்லிண்டு நம்ம கடவுளை கேவலமா பேசும் கேவலமா நடத்தும் அறிவுஜீவுகளை இந்த நாட்டுலேந்து துரத்தினால் எங்கே போவானுங்க ப்ளீஸ் சொல்லுங்க தியாவின் வாரிசுகளோ தெருவோட பல வேத விற்பன்னர்களை அவமானம் செய்வதும் கேவலமா நடப்பதும் தான் பாக்கிறோமே இந்த நாய்களை எல்லாம் வீரமாமணி யோ அவன் குடுமபமோவீட்டுக்குள்ளே வச்சுண்டு சோறுபோடுவானுகளா ரஜினி ஹிந்துமதம் பற்றி சொல்லுவது நன்னாவே இருக்கு இந்துக்களுக்கேதான் இந்தியா என்பது எவனாலும் மறுக்கவேமுடியாது வெளிநாடு போயிட்டு கொடியே காக்கட்டும் ஆனால் பலரின்மனமும் உள்ளமும் விரும்புவது தன தாயநாட்டையேதான்
Rate this:
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
27 மார், 2020 - 09:43 Report Abuse
Nallavan Nallavan பஞ்சபூதங்களைக் கடவுள்களாக ஹிந்துக்கள் வணங்குகிறார்கள் என்று சூப்பரு உள்ளிட்ட பலர் சொல்கிறார்கள் ..... இன்னும் பலர் கோமாதா ஒரு தெய்வம் என்கிறாரகள் ..... இவை அனைத்தும் ஹிந்துக்களால் போற்றப்படுகின்றன என்பது உண்மையே ..... வழிபடுகிறார்கள் என்பது தவறான கருத்து ...... ஒவ்வொரு ஹிந்துவுக்கும் தெரியும் கடவுள் உண்மையில் உருவமில்லாதவன் என்று ..... கடவுள் ஆணோ, பெண்ணோ அல்ல என்று கூறுவது கூட ஹிந்து மதம் மட்டுமே .....
Rate this:
Thirumoolar - chennai,இந்தியா
26 மார், 2020 - 19:45 Report Abuse
Thirumoolar ரஜினி அவர்கள் அருமையாக பேசி உள்ளார் உண்மையை பேசி உள்ளார் தைரியமாக ..உண்மையில் அவர்க்கு பயம் இல்லை....பாராட்டுதலுக்கு உரியது. இப்படி தமிழ் பேசும் மாநிலத்தில் உள்ள எந்த நடிகராவது அல்லது அரசியல்வாதியாவது (ராஜேந்திர பாலாஜி தவிர்த்து ) ஏன் பிரபலமாவது பேசுகிறீர்களா ? பயம் அல்லது வோட்டு வங்கி அவர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே ஆதரவு பெறுகிறது .....நல் வாழ்த்துக்கள் ரஜினி அவர்களே
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
26 மார், 2020 - 16:11 Report Abuse
chakra ஒவொருத்தணும் இங்கே செத்துட்டு இருக்கான் .
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in