Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வேட்டையாடு விளையாடு 2: மீண்டும் இணையும் கமல் - கவுதம் மேனன்

25 மார், 2020 - 19:06 IST
எழுத்தின் அளவு:
Kamal---Gautham-menon-plan-for-vettaiyadu-vilayadu-2

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்த படம் ‛வேட்டையாடு விளையாடு'. கடந்த 2006-ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கவுதம் மேனனும், கமலும் ஏற்கனவே முயற்சி செய்தனர். ஆனால் அது அப்போது கைக்கூடவில்லை.

இந்நிலையில் அதுகுறித்த பேச்சுவார்த்தை தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேர்ஷனல் நிறுவனத்துக்கு மூன்று படங்களை இயக்க கவுதம் மேனன் ஒப்பந்தம் செய்துள்ளார். தற்போது ஜோஸ்வா எனும் படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தை தொடங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இதுதொடர்பாக நடிகர் கமலை சந்தித்து கவுதமும், ஐசரி கசேசனும் பேசியிருப்பதாகவும், கமல்ஹாசனும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛அசுரன்' கன்னட ரீ-மேக்கில் சிவராஜ்குமார்‛அசுரன்' கன்னட ரீ-மேக்கில் ... சண்டைக்காட்சி! சண்டைக்காட்சி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in