'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இதுகுறித்து கமல், சமூகவலைதளத்தில், ‛‛உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்கு பசியாற்றுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதி நிலையை என்றும் காத்தவன் சிறு தொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம் என பதிவிட்டார்.
கொடூரமான கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்புவதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கையும் கூட, அரசியலுக்காக நடிகர் கமல் விமர்சிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் தூங்காநகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும் படங்களின் இயக்குனர் கவுரவ், ‛‛அன்புள்ள கமல் சார். அரசியல் பேசவும், அரசையும், அதிகாரிகளையும் எச்சரிக்கவும் இது நேரமல்ல. ஒரு நடிகராகவும் ஒரு அரசியல்வாதியாகவும் ஒட்டுமொத்த ஆழ்வார்பேட்டை மக்களின் தேவையை நீங்கள் நிறைவேற்றலாம். உங்களின் ரசிகனாக நான் தூங்கா நகரத்தில் அதைத்தான் செய்கிறேன்" என அறிவுரை வழங்கி உள்ளார்.