'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா எனும் கொடி நோய், இந்தியாவிலும் கால்பதித்து தமிழகத்திலும் பரவி உள்ளது. போர்க்கால அடிப்படையில் மத்திய - மாநில அரசுகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 21 நாட்களுக்கு நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நோய் பாதித்தவர்களுக்கு உதவும் விதமாக நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது : ‛‛இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்'' என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.