Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா விழிப்புணர்வு: புத்திய உபயோகிங்க: வரலட்சுமி கோபம்

25 மார், 2020 - 15:09 IST
எழுத்தின் அளவு:
Please-stay-at-home,-use-the-brain-says-Varalaxmi

கொரோனா அச்சுறுத்தலால் வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களுக்கும், எங்களுக்கெல்லாம் வரவே வராது என்று சுற்றித் திரியும் மக்களுக்கும் திரை நட்சத்திரங்கள் வீடியோக்கள் மூலம் அறிவுரை வழங்கி வருகிறார்கள். நடிகை வரலட்சுமி சரத்குமார் தன் பாணியில் சற்று கோபமாகவே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

வணக்கம். அனைவரும் வீட்டில் இருப்பீர்கள் என நம்புகிறேன். நானும் வீட்டில்தான் இருக்கிறேன். உங்களுக்கு ரெண்டு மூணு விஷயம் சொல்ல வேண்டும் என தோன்றியது. சொல்லிவிடுகிறேன், ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

முதலில் ஒரு குரூப் சுற்றிக் கொண்டிருக்கிறது... ரொரோனா எல்லாம் நமக்கு வராது என்று. நான் அவர்களுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த நோய் தொற்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இரண்டாவது, சுமார் 27 சதவிகிதம் பேர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளோம். மீதி அனைவரும் வெளியே தான் இருக்கிறார்கள். இதன் ஆபத்து யாருக்கும் புரிவதில்லை. அக்கம் பக்கத்தில் நிறைய வயதானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தான் பாதிப்பு நடக்கிறது. அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்யுங்கள். தள்ளி நின்றே பண்ணுங்கள்.

வாடகை வாங்குபவர்கள் கவனத்துக்கு. இங்கு நிறையப் பேருக்குச் சம்பளம் கிடையாது. அதனால் ஒரு மாதத்துக்காவது வாடகையைத் தள்ளுபடி பண்ணுங்கள். அப்படிச் செய்தால் பலருக்கும் உதவியாக இருக்கும். நிறையப் பேர் ஊருக்கு ஓடுகிறார்கள். ஏனென்றால் இங்கு தங்க இடமில்லை. அதை எல்லாம் பார்க்கும்போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. கடைகள் எல்லாம் பார்க்கும் போது புல்லாக இருக்கிறது. அரசாங்கம் கடைகளைத் திறந்து வைக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, பயப்பட வேண்டாம்.

இந்தியாவில் 134 கோடி மக்கள் இருக்கிறார்கள். இத்தாலி மாதிரி சின்ன நாடு அல்ல. ஆகவே இதில் பரவியது என்றால். என்ன ஆகும் என்று கொஞ்சமாவது புத்தியை உபயோகியுத்து நினைத்து பாருங்கள். தயவுசெய்து வீட்டில் இருங்கள். தேவையென்றால் மட்டுமே வெளியே செல்லுங்கள். ஒன்றிணைந்து போராடி கொரோனாவை வெல்வோம்.

மொத்தத்தில் இரண்டே விஷயம் தான். ஒன்று, ஜாலியாக வெளியே சுற்றி, கரோனாவை இந்தியா முழுக்கப் பரப்பி இறப்பை அதிகரிப்பது. இரண்டாவது, ஒரு மாதம் வீட்டில் உட்கார்ந்திருங்கள். 2-ம் மாதம் ஜாலியாக வேலைக்குப் போவது. ஆகவே, நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்.

இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா தாக்குதல்: பரபரப்பை கிளம்பும் ஹாலிவுட் படம்கொரோனா தாக்குதல்: பரபரப்பை ... சீரியஸ் தெரியாமல் இருக்கிறார்கள்: சிவகார்த்திகேயன் சீரியஸ் தெரியாமல் இருக்கிறார்கள்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
29 மார், 2020 - 15:26 Report Abuse
முதல் தமிழன் நீங்கள் முதலில் ஒழுக்கத்தை கற்று கொள்ளுங்கள். பிறகு எங்களை மாதிரி சாதாரண மக்களுக்கு அறிவுரை வழங்கவும்.
Rate this:
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
29 மார், 2020 - 15:24 Report Abuse
முதல் தமிழன் நீங்கள் முதலில் சினிமாக்காரர்களை செய்யாமல் இருக்க சொல்லுங்கள்.
Rate this:
தா்மசிந்தனை - chennai,இந்தியா
26 மார், 2020 - 13:19 Report Abuse
தா்மசிந்தனை வாடகை ஒரு மாதத்திற்கு தள்ளுபடி பண்ணனும் . வாடகை வருமானத்தை மட்டும் நம்பி இருக்கும் குடும்பங்கள் என்ன செய்வார்கள் நீங்கள் கொடுப்பீர்களா
Rate this:
kirukalgal - Chennai,இந்தியா
26 மார், 2020 - 01:28 Report Abuse
kirukalgal , பொது வாழ்வில் பொது வெளியில், சமூகத்தில் வந்து இப்படி செய்து அப்படி சொன்னால், முதலில் உன் புத்தியை ஒழுக்கமா பயன்படுத்து அப்புறம் அரைகுறை அறிவுரை எல்லாம்...
Rate this:
இருங்கடா - Kitchener,கனடா
25 மார், 2020 - 18:51 Report Abuse
இருங்கடா இந்த காரோண நேரத்துல வேதனை என்னன்னா, நீயெல்லாம் அறிவுரை சொல்லுர, அந்த கொடுமையை நாங்க பாக்கவேண்டியது இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in