Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்விழா படங்கள்: எதிரொலி - கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி நடித்த ஒரே படம்

24 மார், 2020 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Sivaji-acted-only-one-film-in-K-Balachander-Directrion

100 படங்களுக்கு மேல் இயக்கிய கே.பாலச்சந்தர் சிவாஜி நடிப்பில் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1970ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்திறகு இது பொன்விழா ஆண்டு. சிவாஜி உடன் கே.ஆர்.விஜயா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜோதி லட்சுமி, சிவகுமார், லட்சுமி, மேஜர் சுந்தர்ராஜன், வி.எஸ்.ராகவன், டி.எஸ்.பாலையா, நாகேஷ், சகுந்தலா, ஓ.ஏ.கே.தேவர், விஜயலலிதா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். என்.பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

நேர்மையான வக்கீலாக சிவாஜி கணேசன், ஒரு சின்ன தடுமாற்றத்தால் பணத்தாசைக்கு ஆட்பட்டு விடுவார். இதனால் அவர் மனசாட்சி அவரை கொல்லும், அவரின் இந்த அவஸ்தயை வில்லன் பயன்படுத்தி அவரை தன் கைக்குள் வைத்திருப்பான். அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு கே.பாலச்சந்தரும், சிவாஜியும் இணைந்து பணியாற்றவில்லை. பின்னாளில் ‛உன்னால் முடியும் தம்பி படத்தில் ஜெமினி கணேசன் நடித்த கேரக்டரில் சிவாஜியை நடிக்க வைக்க விரும்பினார் கே.பாலச்சந்தர். ஆனால் அதற்கு சிவாஜி மறுத்துவிட்டாக கூறுவார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இன்று பிறந்தநாள்: தாய் மொழியில் கடைசி பாடலை பாடிய டி.எம்.எஸ்இன்று பிறந்தநாள்: தாய் மொழியில் ... பெப்சி தொழிலாளர்களுக்கு சிவார்த்திகேயன் 10 லட்சம் நிதி பெப்சி தொழிலாளர்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

LAX - Trichy,இந்தியா
26 மார், 2020 - 08:57 Report Abuse
LAX OMG..
Rate this:
LAX - Trichy,இந்தியா
26 மார், 2020 - 07:49 Report Abuse
LAX சிவாஜி இந்த படத்தில் நேர்மையான வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்..
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25 மார், 2020 - 16:55 Report Abuse
skv srinivasankrishnaveni MAHAADHEVAN K.V. G.RAMNAADHAN MSV RAMAMURTHI ISAILE OLICHCHA PAADALKAL ELLAAM THENIL OORIYA PALAACHCHULAIKALE THAAN
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in