Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்று பிறந்தநாள்: தாய் மொழியில் கடைசி பாடலை பாடிய டி.எம்.எஸ்

24 மார், 2020 - 10:52 IST
எழுத்தின் அளவு:
TM-Soundarrajan-sings-his-last-song-in-sourashtra-language

50 ஆண்டுகள் தமிழ் சினிமாவை தனது குரலால் கட்டிப் போட்டிருந்த டி.எம்.சவுந்தர்ராஜன் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய ஒரு சிறிய நினைவோட்டம். மன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டார். அவருக்கு பட்டாடைகள் அணிவதில் மிகவும் நாட்டம். இதனால் தனக்கு பட்டாடை நெய்து தருவதற்காக குஜராத்திலிருந்து சவுராஷ்டிர மக்களை அழைத்து வந்தார். அவர்கள் பட்டாடை நெய்வதில் கைதேர்ந்தவர்கள். அவர்களை தனது மஹாலை சுற்றிலும், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் குடியமர்த்தினார்.

சவுராஷ்டிர மக்கள் மிகவும் அமைதியானவர்கள். தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று இருக்கிறவர்கள். காலப்போக்கில் இந்த மக்கள் தமிழ் கற்று தமிழர்களாக மாறிவிட்டார்கள். சவுராஷ்டிரா மொழியின் எழுத்து வடிவம் மறைந்து விட்டது. பேச்சு வடிவம் மட்டுமே உள்ளது.

இந்த சமுதாயத்தில் பிறந்த டி.எம்.சவுந்தர்ராஜன் நாவில் தான் தமிழ் விளையாடியாது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடினார். டி.எம்.சவுந்தர்ராஜனுக்கு தன் தாய் மொழியில் பாடும் வாய்ப்பு அவரது கடைசி காலத்தில் தான் அமைந்தது.

சவுராஷ்டிரா மொழியில் “கெட்டிவிடோ (நிச்சயதார்த்தம்) எனும் தலைப்பில் எடுக்கப்பட்ட படத்தில் டி.எம்.எஸ்., தனது தாய்மொழியான சவுராஷ்டிரா மொழியில் பாடினார். இதுவே, அவர் பாடிய கடைசிப் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் தமிழுக்கு வரும் சர்வானந்த்மீண்டும் தமிழுக்கு வரும் சர்வானந்த் பொன்விழா படங்கள்: எதிரொலி - கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி நடித்த ஒரே படம் பொன்விழா படங்கள்: எதிரொலி - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

O.S.Subramanian - மதுரை.,இந்தியா
30 மார், 2020 - 08:13 Report Abuse
O.S.Subramanian ஸௌராஷ்ட்ர மொழிக்கு தனி எழுத்து உண்டு. கம்ப்யூட்டரில் ஃபாண்ட் உள்ளது. அழகி+ என்ற மென்பொருளில் ஸௌராஷ்ட்ர மொழியின் ஃபாண்ட் உள்ளது. மொபைல் போனிலும் ஸௌராஷ்ட்ர எழுத்து உள்ளது. கூகிள் இண்டிக் போர்டில் ஸௌராஷ்ட்ர எழுத்து உள்ளது. யூனிகோடில் ஸௌராஷ்ட்ர லிபி உள்ளது. ராமாயணம், மஹாபாரதம், பகவத் கீதை, திருக்குறள் முதலியவைகளின் மொழி பெயர்ப்புகள் உள்ளன. அண்மயில் சிலப்பதிகாரம் ஸௌராஷ்ட்ர மொழியில் வெளி வந்துள்ளது. இது ஒரு இலக்கிய மொழி யாகும்.
Rate this:
Deepak - chennai,இந்தியா
27 மார், 2020 - 15:00 Report Abuse
Deepak நானும் சௌராஷ்டிரன் என்பதில் பெருமை. வீட்டில் தாய்மொழி பேசினாலும் அதிகமாக தமிழில் தான் பேசுகிறோம். கடையில் அலுவலகத்தில் பள்ளியில் என்று. இரண்டு கண்களாக. அனைவரும் தமிழ் கற்க வேண்டும். இல்லை என்றால் எழுத்து வடிவம் அழிந்து விடும். இவரின் முருகன் பக்தி பாடல்கள் தமிழ் இருக்கும் வரை ஒலிக்கும்.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
26 மார், 2020 - 08:33 Report Abuse
 nicolethomson இந்த சவுராஷ்டிரர்கள் வீட்டுமொழி வேறானாலும் தமிழ்மொழிதான் அவர்களுக்கு இன்று எல்லாமுமாகி போனது , ஆனாலும் பாலைவனத்தார்கள் இப்போதும் பாலைவன கொழிக்கிறுக்கலை விடமாட்டேன் என்கிறார்களே
Rate this:
karutthu - nainital,இந்தியா
25 மார், 2020 - 17:10 Report Abuse
karutthu தமிழ் இருக்கும் வரை டி எம் எஸ் வாழ்வார் திரைப்பட துறையினர் அவருக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்துவர்களா ? இப்போ எம் ஜி ஆர் ,சிவாஜி ,ஜெயலலிதா இவர்களை கொண்டாடுகின்றனர் வருங்காலத்தில் எப்படி இருக்குமோ ?
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25 மார், 2020 - 16:53 Report Abuse
skv srinivasankrishnaveni முருகா என்றழைக்கவா முத்துக்குமாறா என்று அழைக்கவா ,கற்பனையென்றாலும் கற்சிலை என்றாலும் போல எவ்வ்ளோ முருகன் பாடல்கள் வரை பலமுறை நேரில் பார்த்திருக்கேன் பாடல்களை ரசித்தேன் ரசிக்கின்றேன் என் உயிர் உள்ளவரை மறக்கவே முடியாத முருகா என்றழைக்கவா என்று பாடாதவர்களே இல்லே
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in