விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ‛லியோ' டைட்டில்: அக்.,19ல் ரிலீஸ் | ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' | ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா! | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா! | விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்! | சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! | சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம் | நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி | தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம் | காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு |
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், பொதுமக்கள் பலரும் அஜாக்கிரதையாக நடந்து கொள்கின்றனர். மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே வெளியில் வர வேண்டும் என கூறப்படுகிறது. ஆனாலும், இந்த வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் கடைகள் திறக்கப்பட்டு மக்கள் வழக்கம் போல் இயங்க ஆரம்பித்துள்ளனர். இது கொரோனா வைரஸ் தீவிரத்தை உணர்ந்த அனைவரையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றிய சாம்.சி.எஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கோபத்துடன் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
ஒரு நோயின் பயங்கரம், தனி மனித கட்டுப்பாடு, பிறர் நலன், என எந்த பொறுப்பும் இல்லாத கேவலமான சமூகத்தில் வாழ்வது வேதனை! எல்லாத்தையும் இழுத்து மூடுங்க, சொன்னா கேக்குற மாதிரி தெரியல.தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல்பாடுகள் பெருமை கொள்ள வைக்கிறது என தெரிவித்துள்ளார்.
உடனே, அதற்கு எதிர்வினையாற்றினார் ரசிகர் ஒருவர். அவர் கூறியிருப்பதாவது: அன்னைக்கு அன்னைக்கு வேலைக்குப் போனா தான் சார் சாப்பாடு. இப்படி இருக்க ஏழை நாட்டுல, வீட்டுல உக்காந்துட்டு மாசம் மாசம் கட்ட வேண்டிய கடன் பிரச்னை எல்லாம் இருக்கு. உயிர் முக்கியம். அது இருந்தா தான் வேலைக்கு போக முடியும். ஆனால், வேலைக்கு போனால் தான், இங்கு வாழ முடியும் என்ற நிலை இருக்கிறதே என பதிவிட்டார்.
அதற்கு பதிலளித்த சாம்.சி.எஸ், அரசு ஏழைக் குடும்பங்களுக்கு பண உதவி செய்யும் என நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.