திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
கொரோனா பாதிப்பால் சினிமா, சின்னத்திரை உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. அதை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். ஒருவேளை உணவுக்கூட தவிப்பதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், பெப்சி தலைவர் என்கிற முறையில் பணிவான வேண்டுகோள். கொரோனா வைரஸ் பாதிப்பால் சினிமா உலகம் முடங்கி உள்ளது. இது. இதற்கு முன்பு தயாரிப்பாளர்களை எதிர்த்து ஊதிய உயர்வு, அரசிடம் வேண்டுகோள் வேண்டி போராட்டம் நடத்தினோம். ஆனால் இப்போது நடப்பது சமூகத்திற்காகவும், தேசத்திற்காகவும் நடக்கிறது. இது தொழிலாளர்களை மிகவும் பாதித்துள்ளது. இந்த சங்கத்தில் உள்ள 25 ஆயிரம் பேர்களில் 10 ஆயிரம் பேர் தினசரி வேலைக்கு சென்று ஊதியம் பெறுகிறவர்கள்.
இன்று(மார்ச் 23) காலையில் லைட்மேன் சங்கத்தை ஒரு உறுப்பினர் ஒருவர் போன் செய்து வேலை நிறுத்தம் எப்போது முடியும் என கேட்டார். 15 - 20 நாட்கள் ஆகும் என்றேன். அதற்கு அவர், ‛‛நான் வேலைக்கு போய் இறந்தால் கூட பரவாயில்லை. சாப்பாடு இல்லாமல் என் குழந்தைகள் பசியால் இறப்பதை விட கொரோனா வைரஸால் சாகிறேன்'' என வேதனை உடன் கூறியபோது எனக்கு ஏற்பட்ட வேதனைகளை என்னால் வார்த்தைகளால் எழுத முடியது.
இன்று சினிமாவில் நல்ல நிலையில் இருப்பவர்கள் குறிப்பாக நடிகர், நடிகையர் சகோதர சகோதரிகளுக்கு, இயக்குநர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு, அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கும், மேலும், திரைப்பட தொழிலின் மற்ற அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதநேய பண்பாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோளை முன் வைக்க விரும்புகிறேன்.
நம் சங்க உறுப்பினர்களில் இவரைப் போல ஒரு வேலை சோற்றிற்குக் கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர் இருப்பார்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும். பத்தாயிர உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால் ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் 1250 ரூபாய் எனக் கணக்கு வைத்தால் இரு கோடி ரூபாய் ஆகிறது.
கருணை உள்ளம் படைத்த தாங்கள் தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து, உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர், வாழ்வு அளிப்பீர், நிதி அளிப்பீர் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.